SinhalaSriLankaEnglish (UK)

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள - 2026

போட்டிப் பிரிவுகள்
“ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2026” நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. “தொழிற்துறை பிரிவு”, “கருத்திட்டங்கள் பிரிவு” மற்றும் “நிறுவனம், ஊடகம் மற்றும் சமூக பிரிவு” ஆகிய மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
“தொழிற்துறை” ஆனது “பெரிய அளவிலான” மற்றும் “சிறிய மற்றும் நடுத்தர அளவிலான” என இரு உப பிரிவுகளை கொண்டுள்ளது. “பெரிய அளவிலான” உப பிரிவின் கீழ் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 16 பிரிவுகளின் ஊடாக விண்ணப்பிக்க முடியும். அந்தப் பிரிவுகளில் “வைத்தியசாலைகள்” மற்றும் “பொதியிடல் தொழிற்துறைகள் (அச்சிடல் நடவடிக்கைகளுடன்)” ஆகிய இரு பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய 14 பிரிவுகளின் கீழ் “சிறிய மற்றும் நடுத்தர அளவிலான” உப பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும்.


• பொதுக் கழிவு சுத்திகரிப்பு முகாமைத்துவ அமைப்புகள்ஃ திண்மக் கழிவு மீட்புஃ மீள்சுழற்சிஃ அகற்றுதல் அல்லது பதப்படுத்துதல் கைத்தொழில்கள்
• இரசாயன உற்பத்தி கைத்தொழில்கள்
• வாகன சேவை நிலையங்கள்
• உணவு மற்றும் பான உற்பத்தி கைத்தொழில்கள்
• ஹோட்டல்கள்
• உடுதுணிகளை செயன்முறைக்குள்ளாக்குகின்ற கைத்தொழில்கள்
• மருந்து உற்பத்தி மற்றும் அழகுசாதன உற்பத்தி கைத்தொழில்கள்
• வைத்தியசாலைகள்
• இறப்பர் சார்ந்த பொருட்களை உற்பத்திசெய்யும் கைத்தொழில்கள்
• விலங்கு பண்ணைகள்
• தைத்த ஆடை உற்பத்தி கைத்தொழில்கள்
• தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அல்லது தேயிலை தொழிற்சாலைகள்
• பொதியிடல் கைத்தொழில்கள் (அச்சு வேலைகளுடன்)
• கனிமம் சார்ந்த உற்பத்தி கைத்தொழில்கள்
• அரிமரம் சார்ந்த உற்பத்தி கைத்தொழில்கள்
• உலோகம்ஃ இரும்பு அல்லாத உலோகம்ஃ இயந்திரங்கள்ஃ மின்சாரஃ மின்னணு உபகரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள்


“கருத்திட்டங்கள் பிரிவு” பின்வருமாறு ஒரு உப பிரிவையும் மூன்று வகைகளையும் கொண்டுள்ளது:
• “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக் கருத்திட்டங்கள்”, “சிறிய அளவிலான நீர்மின் கருத்திட்டங்கள்”, “சூரிய சக்தி கருத்திட்டங்கள்” (கூரையின் மேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி திட்டங்கள் தவிர்ந்த) மற்றும் “காற்று மின் உற்பத்தி நிலைய திட்டங்கள்”.


“நிறுவனங்கள், ஊடகம் மற்றும் சமூகப் பிரிவின்” கீழ் மதிப்பீடு செய்யப்படும் ஆறு உப பிரிவுகள் உள்ளன:
பாடசாலைகள்
அரச நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள்
உள்ளூராட்சி அதிகாரசபைகள் (திண்மக்கழிவு முகாமைத்துவம்)
பொலிஸ் சுற்றாடல் அலகுகள்
சுற்றாடல் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் அரச சார்பற்ற சுற்றாடல் அமைப்புகள்
சுற்றாடல் நட்பு ரீதியான புத்தாக்கங்கள் (பாடசாலைகள்ஃ பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்கள்ஃ திறந்த பிரிவு)
• ஊடகப் பிரிவானது “வெகுஜன ஊடகங்கள்” மற்றும் “சமூக ஊடகங்கள்” என இரு உப பிரிவுகளை கொண்டுள்ளது. (வெகுஜன ஊடக உப பிரிவானது “தனிநபர்” மற்றும் “நிறுவனம்” என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், சமூக ஊடக உப பிரிவானது “முகநூல் பக்கம்” மற்றும் “யூடியூப் தளம்” என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இங்கு அனைத்து மொழி ஊடகங்களும் ஒன்றாகக் கருதப்பட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.)

மதிப்பீடு மற்றும் விருது விழா
விருது விழாவின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் அந்தந்தத் துறை சார்ந்த நிபுணர்குழுவினால் மேற்கொள்ளப்படும் என்பதுடன், அந்த நிபுணர்குழுவின் தீர்மானமே இறுதியானதாகும். “ஜனாதிபதி சுற்றாடல் விருது”, “வெள்ளி சுற்றாடல் விருது”, “வெண்கல சுற்றாடல் விருது” மற்றும் “தகுதி சுற்றாடல் விருது” ஆகிய விருதுகளை வெல்வதற்குப் போட்டியாளர்களுக்கு வாய்ப்புள்ளது. இந்த விருதுகளும் சுற்றாடல் நட்பு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதற்காக மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினியத் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பைப் பேணும் நோக்கில் நடத்தப்படும் இவ்விருது வழங்கல் விழா, கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்கூறப்பட்ட துறைகளில் நீங்களோ அல்லது உங்களது நிறுவனமோ செயற்படுவதாயின், விருதுகளை வெல்வதற்கு விண்ணப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் அவர்களால் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.உநய.டம இற்குப் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 0112873447, 0112872278 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112888999 எனும் உடனடி அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் மூலம் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், உதவிப் பணிப்பாளர் கலாநிதி லக்மிணி ராதிகா (0706725222), உதவிப் பணிப்பாளர் திரு. சஞ்சீவ புளுகுட்டியாராச்சி (0712691109) மற்றும் உதவிப் பணிப்பாளர் திரு. டி.எம்.எஸ்.எஸ். பண்டார (0777960357) ஆகியோரை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ஊடகப் பிரிவு தொடர்பான விவரங்களுக்கு ஊடக அதிகாரி செல்வி ஸ்ரீயான்ஜனி லொகுலியன அவர்களைத் (0776252288) தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியாகும்.
“ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா” உள்ளிட்ட பல செயற்பாடுகளின் ஊடாக நாட்டில் சுற்றாடல் நட்பு ரீதியான கலாசாரத்தை நிலைநாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்காகப் பணியாற்றுவதை மத்திய சுற்றாடல் அதிகாரசபை எதிர்பார்க்கின்றது. மானுடவியலாளர்களின் கூற்றுப்படி, கலாசாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் கூட்டு வாழ்க்கை முறையாகும். எனவே, நாம் அனைவரும் எமது வாழ்க்கை முறையைச் சூழலுக்கு இணக்கமானதாக மாற்றி, அத்தகையதொரு சுற்றாடல் நட்பு ரீதியான கலாசாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்.
குறிப்பு – ஸ்ரீயான்ஜனி லொகுலியன – ஊடக அதிகாரி – மத்திய சுற்றாடல் அதிகாரசபை

 தனிப்பட்ட     PDF  WORD
 நிறுவனமானது  PDF  WORD
 பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்  PDF  WORD

 

 

Tuesday, 31 March 2026 10:52 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

 

 nir

2026-03-19-PRESIDENTIAL-ENVIRONMENTAL-AWARDS-2026

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்