சு.தா.ம. என்பது இயற்கை மற்றும் சமூக சுற்றாடல் மீதான அபிவிருத்தி செயற்பாடுகளின் சாத்தியமான தாக்கங்களை எதிர்வுகூறுகின்ற ஒரு எளிய செயன்முறையாகும். சு.தா.ம. எதிர்மறை தாக்கங்களை குறைப்பதற்கும், சாதகமான தாக்கங்களை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை ஆலோசனை செய்கின்றது. சு.தா.மதிப்பீடானது மக்களுக்கு வாழத்தக்க சுற்றாடலொன்றையும் அபிவிருத்தியாளர்களுக்கு நிலையான முதலீட்டையும் உறுதி செய்கின்றது. 1981 ஆம் ஆண்டின் கரையோர வலயத்தினுள் மேற்கொள்ளப்படுகின்ற கருத்திட்டங்களுக்கான சட்ட தேவைப்பாட்டை செய்ததோடு, 1993 ஆம் ஆண்டிலிருந்து குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு சு.தா.மதிப்பீடானது இலங்கை முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.
நீங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் அல்லது 1993 ஆம் ஆண்டின் யூன் 24 ஆம் திகதிய 722/22 ஆம் இலக்க மற்றும் 1995 பெப்ரவரி 23 திகதிய 859/4 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை பார்க்கலாம். மத்திய சுற்றாடல் அதிகாரசபை மேற்படி கருத்திட்டத்தை தீர்மானிப்பதற்கான கருத்திட்டம் பற்றிய அத்தியாவசிய தகவல்களை சமர்ப்பிப்பதற்காக அடிப்படை தகவல் கேள்விக்கொத்தொன்றை உங்களுக்கு வழங்கும்.
கருத்திட்டம் கரையோர வலயத்தினுள் அமைந்திருப்பின், நீங்கள் பணிப்பாளர், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். கரையோர பாதுகாப்பு வலயமானது சராசரி உயர் நீர்மட்டக்கோட்டின் நிலம் நோக்கிய 300 மீற்றர் எல்லையொன்றையும் மற்றும் சராசரி தாழ் நீர்மட்டக்கோட்டின் கடல் நோக்கிய 2 கிலோமீற்றர் எல்லையொன்றையும் உள்ளடக்கிய பரப்பளவாகும். நிலப்பகுதியில் பாரிய ஆற்றுமுகம் மற்றும் ஏனைய நீர்நிலைகளைப் பொறுத்தவரையில் நீர் பகுதியிலிருந்து 2 கி.மீ தூரமானதாக இருக்கும் போது நீர் நிலையின் முகத்திற்கு செங்குத்தக கொடொன்றை வரைதல் வேண்டும்.
கருத்திட்டமானது தேசிய ஒதுக்குகள் ஒன்று காணப்படுகின்ற எல்லையினது ஒரு மைல் பரப்பினுள் காணப்படுமாயின், கருத்திட்ட முன்மொழிவாளர் வனசீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் மட்டுமே சு.தா.ம. செயன்முறையை கோரவேண்டிய தேவைப்பாட்டைக் கொண்டுள்ளன.
சுற்றாடலுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை விளைவிக்கக்கூடிய பெரியளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்கள் மட்டுமே குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களாக பட்டியல்படுத்தப்படுகின்றன. இரு வகைகளாக கருத்திட்டங்கள் குறிந்துரைக்கப்படுகின்றன.
வகை மற்றும் பருமனால் வரையறுக்கப்படுகின்றன (உதாரணமாக, 25 மெகாவோற்களுக்கு மேலதிகமான அனல்மின் நிலையங்கள், 99 அறைகளுக்கு மேற்பட்ட ஹோட்டல்கள், 10 கி.மீ. மேற்பட்ட நீளமுடைய நெடுஞ்சாலைகள், சீமெந்து உற்பத்தி தொழிற்சாலை, 4 ஹெக்டயர்களுக்கும் அதிக பரப்புடைய ஈரநிலங்களின் மீட்பு)
அமைவிடத்தால் வரையறுக்கப்படுகின்றன (சுற்றாடல் கூருணர்வுள்ள பிதேசத்தினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமையப்படவுள்ள கருத்திட்டங்கள். அவையாவன, வனங்கள் மற்றும் வனசீவராசி ஒதுக்குகள், நீரோடை அல்லது வாவி ஒதுக்கங்கள், தொல்பொருளியல் ஒதுக்கு, பிரகடனபடுத்தப்பட்ட அரிப்புக்குள்ளாகும் இடங்கள்)
1993 ஜூன் 24 ஆம் திகதிய 722/22 ஆம் இலக்க மற்றும் 1995 பெப்ரவரி 23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றாடல் கூருணர்வுள்ள பிரதேசத்தில் உத்தேசிக்கப்பட்ட உமது அமைவிடம் அமையவுள்ளதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய ம.சு.அதிகாரசபையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் புவி சார் தகவலியல் முறைமை (GIS) தொடர்பான சேவைகளைப் பெறலாம்.
உத்தேச கருத்திட்டம் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களின் பட்டியலில் சார்ந்திருக்கின்றதா என்பதை முதலில் கண்டறியவேண்டும்.
அதன்பின்னர் கருத்திட்ட பிரரணையாளர் (நீங்கள்) ம.சு.அதிகாரசபையிடம் உத்தேச கருத்திட்டம் பற்றிய சில ஆரம்ப தகவல்களை சமர்ப்பித்தல் வேண்டும். கருத்திட்டம் பற்றிய ஆரம்ப தகவல்களை சமர்ப்பிப்பதற்காக ம.சு.அ. ஒரு எளிய படிவத்தை வழங்கும்.
சு.தா. ம செயன்முறையின் நிருவாகத்திற்கு கருத்திட்ட அங்கிகாரமளிப்பு முகவராண்மையே அரசாங்க முகவராண்மைக்கு பொறுப்பாக இருக்கும். இலங்கை சுற்றுலா சபை, கமத்தொழில் அமைச்சு, கரையோர பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை என்பன இதற்கான உதாரணங்களாகும்.
ஆரம்ப தகவலின் அடிப்படையில் கருத்திட்டத்திற்கான கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மைய ம.சு.அ. பெயரிடும். கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட “நோக்கெல்லையை வரையறுத்தல்” கூட்டங்களை நடாத்தி சு.தா.ம. அறிக்கைகான ஒப்பந்த நியதிகளை தயார்படுத்தும். கருத்திட்டம் பாரியளவு விரிவானதாகவும் அளவில் பெரியதாகவும் இருப்பின், கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மை கருத்திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை கோரலாம்.
கருத்திட்ட கோட்பாடு விருத்திசெய்யப்பட்டு, கருத்திட்டத்தின் அமைவிடம் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர். கருத்திட்ட பிரேரணையாளர் முன் இயலுமை ஆய்வை ஒன்றை மேற்கொண்டால் அதுவே அதற்கான உரிய நேரமாக இருக்கும். ஆரம்ப தகவலை சமர்ப்பிப்பதற்கு நீங்கள் பூரண இயலுமை அறிக்கை கிடைக்கப்பெறும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கருத்திட்டங்களின் சுற்றாடல் தாக்கங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் இல்லையாயின் கருத்திட்ட பிரேரணையாளர் ஒரு ஆரம்ப சுற்றாடல் பரிசோதனையை மேற்கொள்ளும்படி கோரப்படுவார். இது ஒப்பீட்டு ரீதியில் சிறியதும் எளியதுமான ஒரு ஆய்வாகும். எவ்வாறாயினும் சாத்தியமான தாக்கங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் தோன்றின் கருத்திட்ட பிரேரணையாளர் சுற்றாடல் தாக்க மதிப்பீடொன்றை செய்யும் படி கோரப்படுவார். இது மிகவும் சுற்றாடல் தாக்கங்கள் பற்றிய விரிவான மற்றும் விளக்கமான ஒரு ஆய்வாகும்.
ஆரம்ப தகவலை கருத்திட்ட பிரேரணையாளர் சமர்ப்பித்த திகதியிலிருந்து சு.தா.ம. செயன்முறைக்கு கருத்திட்ட அங்கீகார முகவராண்மைகளுக்கு அனுமதிக்கப்பட்ட காலம், மீளாய்வு செய்வதற்கு கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு வழங்கப்பட்ட தகவல் போதுமானது என்ற அடிப்படையில் 116 வேலை நாட்கள் வழங்கப்படுகின்றன. ஆரம்ப சுற்றாடல் பரிசோதனையொன்றை செயன்முறைப்படுத்த கருத்திட்ட அங்கீகார குழுவுக்கு வழங்கப்பட்ட காலமானது குறைவானதாகும். எவ்வாறாயினும் ஆ.சு.ப./ சு.தா.ம. அறிக்கையை தயாரிப்பதற்கான நேர வரையறை ஒன்று இல்லை. சு.தா.ம. அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம், கருத்திட்டத்தின் தன்மையை பொறுத்து 3 மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை செல்லலாம் என்பதை அனுபவங்கள் மூலம் தெரிகின்றன.
கருத்திட்ட பிரேரணையாளர்களால் ஆலோசகர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர். ஆலோசகர்களதும், ஆலோசனை வழங்கும் நிறுவனங்களினதும் பட்டியலொன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபைகளில் காணப்படுகிறது. சு.தா.ம. ஆய்வுகளை ஆலோசனை நிறுவனங்களிடமிருந்து கேள்விப் பத்திரங்களை கோருவதற்கு நீங்கள் விளம்பரங்களை செய்ய முடியும். கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு தமது சு.தா.ம. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு கருத்திட்ட பிரேரணையாளர் பொறுப்பானவராவார்.
அது ஒப்பீட்டு ரீதியில் குறுகியதாகவும் சுருக்கமான ஆவணமாகவும் (சுமார் 100 பக்கங்கள் கொண்டதாக) பின்வருவனவற்றை விளக்கக்கூடியவாறு இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் எழுதப்பட வேண்டும்.
அனைத்து கூறுகளையும் உள்ளடக்கி, உத்தேச கருத்திட்டத்தின் விபரங்கள்
உத்தேச கருத்திட்ட இடத்தின் தற்போதுள்ள சுற்றாடல் நிலை
கருத்திட்டத்தின் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்கள்
உத்தேச தணிப்பு நடவடிக்கைகள்
நியாயபூர்வமான மாற்றீடுகள்
கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம்
உசாத்துனைக்கு ம.சு.அ. நூலகத்தில் கடந்த கால சு.தா.ம. அறிக்கைகள் உள்ளன.
கருத்திட்டத்திற்கு குறித்துரைக்கப்பட்ட கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மைக்கு சமர்ப்பித்தல் வேண்டும். கருத்திட்ட பிரேரணையாளர் சு.தா.ம. அறிக்கையின் தேவையான எண்ணிக்கை அளவு பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும். சு.தா.ம. அறிக்கை சிங்களத்திற்கும், தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும்.
கருத்திட்ட அங்கீகாரமளித்தல் முகவராண்மை. கருத்திட்ட அங்கீகாரமளித்தல் முகவராண்மையால் நியமிப்படும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவானது சு.தா.ம. அறிக்கையை சுயாதீனமாக மதிப்பீடு செய்து அவர்களது அவதானங்களை சமர்ப்பிக்கும். தமது முடிவை வழங்குவதில் கருத்திட்ட அங்கீகாரமளித்தல் முகவராண்மை இந்த அவதானங்களை பயன்படுத்தும்.
இதற்கு மேலாக கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மையின் தீர்மானம் நடைமுறைக்கு வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணக்கப்பாடு அவசியமாகின்றது.
பொதுவாக அங்கீகாரம் 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். கருத்திட்ட பிரேரணையாளர் தீர்மானத்தின் 3 வருடங்களுக்குள் பணியை ஆரம்பிக்காவிடின் கருத்திட்ட அங்கீகார முகவராண்மையிடமிருந்து அங்கீகாரத்தை புதுப்பித்தல் அவசியமானதாகும். செல்லுபடியாகும் காலம் வழமையாக அங்கீகார கடிதத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு செய்வதற்கு அவாகளுக்கு உரிமை உண்டு. செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும்.
ஆம்.
உத்தேச இடத்தின் மீது உள்ளூர் மட்டத்தில் நியாயாதிக்கத்தை கொண்டுள்ள தொடர்புடைய அரசாங்க நிறுவனத்திடமிருந்தும் கருத்திட்டத்திற்காக நீங்கள் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவேண்டி இருக்கும். அங்கு ஏனைய சில அனுமதித் தேவைப்பாடுகளும் காணப்படலாம். சு.தா.ம. அங்கீகாரமானது சுற்றாடல் அனுமதியை மட்டுமே வழங்குகின்றது என்பதை நினைவிற் கொள்க. சு.தா.ம. செயன்முறைக்கு செல்ல முன்னர் கருத்திட்ட பிரேரணையாளர் உரிய அதிகாரிகளிடமிருந்து காணி அனுமதிகள் போன்ற ஏனைய அனுமதிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
இடத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாத செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ள முடியும். கருத்திட்ட பிரேரணையாளர் மக்களுக்கும் கருத்திட்டத்திலும் அதன் விளைவுகளிலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கும் கருத்திட்டம் பற்றி விளக்கமளிக்க முடியும். உண்மையில், கருத்திட்ட பிரேரணையாளர்கள் இந்த நோக்கத்திற்காக தொழில்சார் மக்கள் தொடர்பு உசாவலர்களை ஈடுபடுத்தும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
காணி நில அளவை மற்றும் களப் பரிசோதனை போன்ற அத்தகைய செயற்பாடுகளையும் நீங்கள் மேற்கொள்ள முடியும்.
பத்தரமுல்லை, இல. 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் முகாமைத்துவ மதிப்பீட்டு பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
தொலைபேசி : 011-2872419, 011-2876643
தொலைநகல் : 011-2872296
மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பின்வரும் ஆவணங்கள் பயனுள்ளவையாகும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல் – இல.1 கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கான ஒரு பொது வழிகாட்டல்
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல் – இல.2 சுற்றாடல் சார் நோக்கெல்லையை நடத்துவதற்கான ஒரு பொது வழிகாட்டல்
மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலுள்ள நூலகங்கள் சு.தா.ம. பற்றிய பின்னணியை கொண்ட பல நல்ல திரட்டல்களை கொண்டுள்ளன. உசாவுகைக்காக கடந்த கால சு.தா.ம. அறிக்கைகளின் பிரதிகளை ம.சு.அ. சபையின் நூலகம் கொண்டுள்ளது.
புதிய கருத்திட்டம்/ தொழில்துறையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் தேவைப்பாடுகள்
கருத்திட்டம் / தொழில்துறை ஒன்றின் தொழிற்பாட்டுக்கான சுற்றாடல் தேவைப்பாடுகள்
ஆபத்துமிக்க பொருட்களை இறக்குமதி/ ஏற்றுமதி செய்வதற்கான சுற்றாடல் தேவைப்பாடுகள்
ஆம், சாத்தியமான விடயமாகும்.
தொடர்புடைய மாகாண அலுவலகத்திற்கு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.
சு.சி. வழங்கப்பட்ட திகதியிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகு காலம் சுற்றாடல் சிபாரிசில் சுட்டிக் காட்டப்படும்.
இடவமைவு பற்றிய பரிசோதனைக்கு பரிசோதனை கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தற்போது ஆகக் குறைந்த்து ரூபா. 3,360/-, ஆகக் கூடியது ரூபா. 11,200/- தொகையாகும். (அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க வரிகளுடன்)
ஆம்.
சுற்றாடல் சிபாரிசை பெற நடைமுறைகள் உள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏதாவதொரு மாகாண அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுக்கு உட்படாத எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாடு/ தொழில்துறை ஆனது சுற்றாடல் சிபாரிசொன்றை பெற்றுக் கொள்வது பொதுவாக ஆக்கபூர்வமானதாகும். இது ஆரம்பத்திலேயே சாத்தியமான சுற்றாடல் தாக்கங்களை அடையாளங் காண்பதற்கும் அதன் பிரகாரம் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இயலச் செய்யும். இது தொழிற்பாட்டு கட்டத்தில் பொதுமக்கள் முறைப்பாடுகளின் ஆபத்தை குறைப்பதற்கும் தொழிலதிபர்களுக்கு உதவும்.
ஒரு இடத்தில் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடொன்றை/ தொழில்துறை ஒன்றை தாபிப்பதற்கு/ இடமளிப்பதற்கு முன்னர் சாத்தியமான சுற்றாடல் சார் பிரச்சினைகளை கையாள்வது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழங்கப்படுகின்ற நிபந்தனைகளையுடைய ஓர் ஆவணம்/ கடிதம்.
சு.பா.அ. வைத்திருப்பவர், ம.சு. அதிகாரசபையினால் குறித்துரைக்கப்பட்ட தகுதிறன்கள் மற்றும் நியமங்களுக்கு ஏற்ப சுற்றாடலுக்கு கழிவுகளை, வெளியேற்றங்கள்/ புகை / வாயு, ஒலி/ அதிர்வு என்பவற்றை வெளியேற்றுவதற்கான ஒரு சட்ட ரீதியான அதிகாரமாகும். இது தொழில்துறை செயற்பாட்டின் மூலம் சுற்றாடலுக்கு சு.பா.அ. வைத்திருப்பவர் கழிவுகளையும் வெளியேற்றங்களையும் வெளியேறுவதை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு உதவியாக அமையும்.
அருகில் உள்ளவர்கள், எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கான சாத்தியப்பாடு குறைக்கப்படும்.
தொழில்துறை குறித்து பொதுமக்கள் நம்பகத்தன்மை கட்டியெழுப்பப்பட்டு, தொழில்துறையை நோக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது கொள்வனவாளர்களை உற்பத்தி கவரக்கூடியதாக இருக்கும்.
தொழில்துறையின் செயன்முறையை மேலும் மேம்படுத்துவதற்கு வங்கிகளிலிருந்து கடன்களை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு சு.பா.அ. வைத்திருப்பவர் தகுதியுடையவராக மாறுகின்றார்.
சு.பா.அ. வைத்திருப்பவர், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறை பெறுவதற்கான ISO சான்றிதழை நோக்கி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
பின்வரும் நிலைமைகளின் கீழ் சு.பா.அ. இடைநிறுத்தப்பட அல்லது இரத்துச் செய்யப்பட முடியும்.
அனுமதிப்பத்திரத்திற்குரிய ஏதாவது நியதி, நியமம் மற்றும் நிபந்தனைகளை மீறுதல்.
அனுமதிப்பத்திரம் வழங்கியதிலிருந்து காணப்படும் சுற்றாடல், இயற்கை காரணிகள் அல்லது பிறவற்றால் சுற்றாடல் மாற்றப்பட்டு அல்லது மாற்றமடைந்து இருத்தல்.
அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சுற்றாடலுக்கு தொடரான கழிவுகளின் நீக்கம், வெளியெற்றும் அல்லது புகை வெளியேற்றம் அல்லது ஏதாவது நன்மையளிக்கும் பயன்பாடு சுற்றாடலை மோசமாக பாதிக்கின்றபோது
முதலாவது சு.பா.அனுமதிபத்திரத்தை விண்ணப்பிக்கும் போது மட்டுமே பரிசோதனை கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஆதலால் சு.பா.அ. புதுப்பிக்கும் போது பரிசோதனை கட்டணத்தை செலுத்தவேண்டிய தேவை இல்லை. எவ்வாறாயினும் புதுப்பித்தல் விண்ணப்பத்தை உரிய நேரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரி தவறும் பட்சத்தில் அவர் சு.பா.அ. புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கு பதிலாக புதிய சு.பா.அ. மீண்டும் சமர்ப்பித்தல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் பரிசோதனை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
சு.பா.அ. புதுப்பிக்கப்பட வேண்டியிருத்தால்
சு.பா.அ. காலவதியாகும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்
செயற்பாடுக்கு ஏதாவது மாற்றங்கள், மாற்றீடுகள் அல்லது விஸ்தரிப்புகளை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்
சு.பா.அ. புதுப்பித்தல் விண்ணப்பப் படிவங்கள் ம.சு.அ. தலைமை அலுவலகம்,,மாகாண / மாவட்ட அலுவலகங்களிலிருந்து.பெற்றுக் கொள்ள முடியும். அதை ம.சு.அ. இணையத்தளமான www.cea.lk இலிருந்து தரவிறக்கம் செய்யப்பட முடியும்.
அதிகாரமளிக்கப்பட்ட அலுவரினால் சு.பா.அ. வழங்குதல் பற்றி தீர்மானம் எட்டப்பட்டதன் பின்னர் சு.பா.அனுமதிபத்திரத்திற்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டு சட்ட அங்கீகாரத்திற்காக சட்ட அலகிற்கு சமர்ப்பிக்கப்படும். சட்ட பிரிவின் அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர், சு.பா.அ. கொடுப்பனவை செலுத்தும்படி விண்ணப்பதாரிக்கு எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்படும். அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தப்பட்டவுடன் அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
பகுதி |
அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது |
ஒவ்வொரு புதிய சு.பா.அ. கட்டணம் அல்லது புதுப்பித்தல் |
அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கூடிய காலம் |
குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளின் எண்ணிக்கை |
A |
ம.சு.அ. |
7500 * |
01 வருடம் |
80 |
B |
ம.சு.அ. |
6000 * |
03 வருடங்கள் |
33 |
C |
உள்ளூர் அதிகாரசபை |
4000 |
03 வருடங்கள் |
25 |
* இந்த கட்டணத்திற்கு மேலதிகமாக, 12% வற் வரி மற்றும்10% முத்திரை கட்டணம் என்பனவும் கட்டணமாக அறவிடப்படும்
சு.பா.அ. வழங்கப்படுவதற்கான தீர்மானமானது பரிசோதனை அலுவலரின் அவதானிப்புகள், சிபாரிசுகளின் அடிப்படையில் ம.சு.அதிகாரசபையின் அதிகாரமளிக்கின்ற உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பத்தில் தரப்பட்ட விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ம.சு.அதிகாரசபையின் தொடர்புடைய அலுவலர்கள் பரிசோதனையை மேற்கொள்வர். பரிசோதனை அறிக்கை அவர்களது சிபாரிசுகளுடன் தயாரிக்கப்படும்.
தொழிலதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் ம.சு.அதிகாரபையின் சம்பந்தப்பட்ட மாகாண/ மாவட்ட அலுவலகம் பரிசோதனை கட்டண தொகையை தீர்மானிக்கின்றது.
அரசாங்க வரிகளுடன் ஆகக் குறைந்த பரிசோதனைக் கட்டணம் ரூபா. 3,360/-
அரசாங்க வரிகளுடன் ஆகக் கூடிய கட்டணம் ரூபா. 11,200/- ஆகும்.
வியாபார பதிவுக்கான சான்றிதழ்
குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கு காணியை பயன்படுத்துவதற்கான சட்ட அதிகாரமளிப்பு (காணி உறுதியின் பிரதி, குத்தகை உடன்படிக்கையின் பிரதி முதலியன)
இடத்தின் நில அளவை வரைபடத்தின் பிரதி.
குறிப்பிட்ட இடத்தில் தொழில்துறையை தாபிப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரமளிப்பு (தொடர்புடைய உள்ளூராட்சி அதிகாரசபையிடமிருந்தான இணக்கப்பாட்டு சான்றிதழ் / வர்த்தக அனுமதிப்பத்திரம் அல்லது இணக்க பத்திரம்)
குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான உற்பத்திச் சான்றிதழ் (குடிபான வகைகள், மருந்துப் பொருட்கள், கிருமிநாசினி உற்பத்தி முதலியன)
மாசுறுதல் பொருட்களை குறைத்தலுக்கான பிரேரணை
சு.பா.அ. விண்ணப்பப் படிவத்தை ம.சு. அதிகாரசபையிடம் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் அல்லது ம.சு.அ. www.cea.lk இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த விண்ணப்ப படிவத்தின் பிரதியும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
உரியவாறு பூர்த்தி செய்யப்பட்ட சு.பா.அ. விண்ணப்பப் படிவம் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை/ செயற்பாட்டின் ஆரம்பத்திற்கு 01 ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) முன்னர் உரிய அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2008.01.25 ஆம் திகதிய 1533/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய “A” மற்றும் “B”பகுதிகளின் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை/ செயற்பாடுகளுக்கான சு.பா.அ. படிவத்தை ம.சு.அ. மாகாண அல்லது மாவட்ட அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
தொழில்துறை அமையவுள்ள தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபை (உ.அ.) நகர சபை/ மாநகர சபை/ பிரதேச சபையிடமிருந்து பகுதி “C” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை/ செயற்பாட்டிற்கான சு.பா.அ. படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும். தே.சு.ச. இன் 26 ஆம் பிரிவின் கீழ் சு.பா.அ. வழங்குவதற்கான ம.சு.அதிகாரசபை தொடர்பான அதிகாரங்கள் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில்துறை/ செயற்பாட்டிற்குரிய சு.பா.அ. படிவத்தை கொழும்பு-01, உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள முதலீட்டு சபையிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
2008 ஆம் ஆண்டின் 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், தொழில்துறை சார் பகுதி A, B மற்றும் C என மூன்று தொகுதிகளாக குறித்துரைக்கப்படுகின்றன. பகுதி A இல் ஒப்பீட்டு ரீதியாக 80 உயர் மாசுறுதல் கம்பனிகள் உள்ளன. பகுதி B இல் 33 நடுத்தர மாசுறுதல் கம்பனிகளும் பகுதி C இல் 25 இற்கு குறைவான மாசுறுதல் தாக்கமுடைய கம்பனிகளும் உள்ளன.
குறித்துரைக்கப்பட்ட தொழில்துறைகள் 2008 ஆம் ஆண்டின் 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படுகின்றன. சு.பா.அனுமதிபத்திரமானது குறித்துரைக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான ஒரு சட்ட ரீதியான தேவைப்பாடாகும்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு இயைந்ததாக குறித்துரைக்கப்படுகின்ற தொழில்துறைகள்/ செயற்பாடுகள் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நியமங்களுக்கு இயைந்து செல்வதற்காக வேண்டி சு.பா.அ. பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
தொழில்துறை கழிவுகளின் நீக்கங்கள், புகை, வாயு, ஒலி மற்றும் அதிர்வு வெளியேற்றங்களை கட்டுப்படுத்துவதனூடாக தொழில்துறை/ செயற்பாடு சுற்றாடல் நட்புடைய விதத்தில் தொழிற்படுவதை ஒழுங்குறுத்துதலும் அதன்மூலம் பேணத்தகு நிலைமையை பேணுதலுமாகும்.
1980 ஆம் ஆண்டில் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணப்படுகின்ற ஒழுங்குறுத்துகை/ சட்ட கருவியே சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமாகும்.
தே.சு. சட்டத்தின் பிரிவு 23A இல் குறிப்பிட்டவாறு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமொன்றின் அதிகாரத்தின் கீழ் அன்றி எந்தவொரு நபரும் குறித்துரைக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. இதன் கருத்து யாதெனில், தொழில்துறைகள்/ செயற்பாடுகள் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், கழிவுப் பொருட்களை வைத்திருப்பதற்கும், புகை, வாயு, ஒலி, அதிர்வு அல்லது கூடுதல் சத்தம் அல்லது அதிர்வு என்பவற்றை சுற்றாடலுக்கு வெளிப்படுத்துவதற்கான சில நிபந்தனைகளின் கீழான ஒரு சட்ட அங்கீகாரமாகும்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999