SinhalaSriLankaEnglish (UK)

தேசிய சுற்றாடல் தகவல் நிலையம்/ நூலகம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தேசிய சுற்றாடல் தகவல் நிலையமானது இலங்கையில் சுற்றாடல் சார் தகவல்களின் பரப்புகைக்கான பிரதான தேசிய நிலையமாகும்.

தே.சு.த.நி. இலங்கை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தகவல் வலைபின்னல் SLISTINET, சுகாதார நூலக தகவல் சேவைகள் HELLIS, விவசாய தகவல் வலைப்பின்னல் AGRINET ஆகியவற்றின் ஒரு அங்கத்துவராக இருப்பதோடு, அந்த நிறுவன வலைமைப்பின் கீழ் தொழிற்படுகிறது.

மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்கள் உள்ள வெளியக பாவனையாளர்களின் தகவல் தேவைகளை திருப்தி செய்வதற்கான தகவல் வலைப்பின்னலொன்றை தேசிய சுற்றாடல் தகவல் நிலையம் தாபித்துள்ளது. இதன் கீழ் பிரதான பணியாக “சொபா கெத” என்ற இயற்கை கள நிலையங்களில் சிறு நூலகங்கள் தாபிக்கப்படுகின்றன.

ரூம்மஸ்சலா (காலி மாவட்டம்), பெல்லன்வில்ல – அத்திடிய (கொழும்பு மாவட்டம்) மற்றும் ரந்தெனிகல (கேகாலை மாவட்டம்) என்பன இந்த தகவல் வலைப்பின்னலுக்கான தெரிவு செய்யப்பட்ட இயற்கை கள நிலையமாகும்.

இந்த நூலகங்கள், தொடர்புடைய இயற்கை கள நிலையங்களினால் நடாத்தப்படுகின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சுற்றாடல் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட தமது திரட்டலை பேணிவருகின்றன.

பிரதான தொழிற்பாடுகள்

  • தகவல் பாவனையாளர்களின் அனைத்து வகுதியினது தகவல் தேவைகளையும் திருப்தி செய்யத்தக்கதாக சுற்றாடல் தகவல் மூலங்களின் திரட்டல்களை உருவாக்கி விருத்தி செய்தல்.

  • வலைப்பின்னல் முறைமை, கூட்டாண்மை நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக சுற்றாடல் தகவல் திரட்டல் மற்றும் தகவல் மூலங்களை ஒருங்கிணைத்தல்.

  • நூலக, ஆவணமாக்கல், தகவல் சேவைகளை வழங்குதல்.

  • சுற்றாடலுடன் தொடர்புடைய தகவல் மற்றும் ஆவணங்களின் பெறுகை, பரப்புகைகளுக்கான சர்வதேச மற்றும் பிராந்திய சுற்றாடல் தகவல் முறைமைகளுடன் இணைப்புகளை தாபித்தல்.

Wednesday, 05 February 2025 06:34 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்