நீர்த்தரம், வளித்தரம், ஒலி மற்றும் அதிர்வுகள் என்பவற்றில் விரிவான சோதனைகளையும் அளவீடுகளையும் மேற்கொள்ள ஆற்றல் கொண்ட நன்கு உபகரண வசதியையுடைய ஆய்வுகூடத்தை மத்திய சுற்றாடல் அதிகாரசபை கொண்டுள்ளது. நீர், வளி, ஒலி, மண் மற்றும் திண்ம கழிவு பரிசோதனை வசதிகள் தேவையானவர்களுக்கு வர்த்தக அடிப்படையின் கீழ் பகுப்பாய்வு பரிசோதனை வசதிகள் வழங்குகின்றன.
1998 இலிருந்து 2011 வரை குறைவான வீழ்ச்சிப்பாடு போக்குடன் 60 – 82 µg/m3 வீச்சினுள் ஒப்பிட்டு ரீதியில் பல வருடங்கலாக கொழும்பில் வருட சராசரி சுற்றுச்சூழல் பீஎம் 10 மட்டத்தில் இருந்து வருகின்றது. உச்சகட்டம் 2001 இல் பதிவு செய்யப்பட்டது (உரு -1). 2009 இல் சிறிய வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதுடன் அது மீண்டும் அதிகரித்தது. எவ்வாறாயினும் இந்த பெறுமானங்கள் பீஎம்-10 இற்கான 50 µg/m3 இன் உலக சுகாதார தாபனத்தின் அண்மைய வழிகாட்டல் பெறுமதி நிலையாக அதிகரித்தது. இந்த வகையில் கொழும்பு நகரம் அதன் நுண்துகள் மாசுறுத்தலின் பிரகாரம் மிகவும் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. எவ்வாறாயினும் 1998 - 2012 வரை பீஎம் – 10 இன் சிறிய வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது. (உரு 1).
மூலம்: மத்திய சுற்றாடல் அதிகாரசபை (2012 வருடம்)
உரு 1: கொழும்பு கோட்டை சுற்றுச்சூழல் வளித்தர கண்காணிப்பு நிலையத்தில் பீஎம் – 10 வருடாந்த சராசரி (1998-2012)
சல்பர் டையொக்சைட், நைட்ரஞன் டையொக்சைட், காபன் மொனொக்சைட், ஓசோன் மற்றும் பீஎம் – 10 சுற்றுச்சூழல் வளி என்பன கொழும்பு கோட்டையில் 1998-2008 காலப்பகுதியில் கண்காணிக்கப்பட்டது. எவ்வாறாயினும் 2008 இல் இருந்து ஏனைய அளவீடுகளை அளவிடுவதற்கான ஏனைய கருவிகள் செயலிழந்து காணப்பட்டதால், கொழும்பு நகர வளித் தரத்தின் உறுதிப்படுத்துவதற்கான பீஎம் 10 அளவீடு மாத்திரம் அளவிடப்பட்டது.
இலங்கையில் போதுமான சுற்றுச்சூழல் வளித் தரக் கட்டுப்பாடுகள் செய்வதற்கு, மூல புகை வெளியேற்றம் மற்றும் மூலமல்லாத புகை வெளியேற்றங்களை கட்டுப்படுத்துவது கட்டாயமானதாகும். மூல புகை கட்டப்பாட்டுக்கான ஓர் உபாயமுறையாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இலங்கைக்கான மூல புகை வெளியேற்ற நியமங்களை இறுதிப்படுத்தியுள்ளது. இந்த நியமங்கள் ம.சு.அ. முகாமைத்துவ சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தலாக வெளிவரும் வரை இடைக்கால நியமத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில், காணப்பட்ட வரையறுக்கப்பட்ட மூலவளங்களுடன் ஐந்து மாசு குவியல்வெளியேற்ற அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வாகன புகை வெளியேற்ற பரிசோதனை நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்பட்ட தன்னியக்க மயப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் வளித்தர கண்காணிப்பு நிலையத்தினைப் பயன்படுத்தி ம.சு.அதிகாரசபையின் வளி, ஒலி அதிர்வு கண்காணிப்பு அலகினால் நடமாடும் சுற்றுச்சூழல் வளித்தர கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
வாகனங்களினால் ஏற்படுத்தப்படுகின்ற வளி மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்காக வாகன புகை வெளியெற்றுகை பரிசோதனை நடாத்தப்படுகின்றது. இந்த அலகின் அலுவலர்கள் வீதியோர கண்காணிப்பு செயற்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். இதற்கு மேலதிகமாக வாகன புகை வெளியேற்றுகை நிகழ்ச்சித்திட்டம் மற்றும் வாகனங்களினால் ஏற்படுத்தப்படுகின்ற வளி மாசுறுதலை கட்டுப்படுத்துவதனூடாக பொதுமக்கள் நன்மை பெறும் நிகழ்ச்சியாக ஒழுங்குறுத்தி மாற்றுவதற்கு ஏற்ற அடிப்படையில் வாகன புகை பரிசோதனை நிலையங்கள் சீரான முறையில் கண்காணிக்கப்படுகிறது.
மூல புகை வெளியேற்ற நியமங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதோடு, கிட்டிய எதிர்காலத்தில் ஒழுங்குவிதி ஒன்றாக வெளியிடப்படவுள்ளது. எவ்வாறாயினும், தற்போது புகை வெளியேற்றங்கள் ம.சு.அ. சபையினால் தாபிக்கப்பட்ட இடைக்கால புகை வெளியேற்ற நியமங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது வளி மாசுறுதல் கட்டுப்பாடு, மற்றும் தவிர்ப்பு தொடர்பான மாலே பிரகடனம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்திற்கான தேசிய அமுலாக்க முகவராண்மையாக உள்ளதோடு, அது தெற்காசியாவுக்கான எல்லை கடந்த தாக்கங்களையும் உள்ளடக்குகிறது. வளி, ஒலி, அதிர்வு கண்காணிப்பு அலகானது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒத்ததாக மாலே பிரகடனத்தின் கீழ் எல்லை கடந்த வளி மாசுறுதல் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஆய்வொன்றை மேற்கொள்கின்றது. செயற்பாட்டு மாதிரிகளின் பயன்பாட்டுடன் சுற்றுச் சூழல் வளி தர பகுப்பாய்வுகள் மேற்படி மாதிரிகள் பெறப்படுகின்ற இடத்தில் மேற்கொள்ளப்படுவதோடு, துடுவெவவில் NO2, SO2 மற்றும் O3 என்பனவற்றின் பகுப்பாய்வுகளும் இடம்பெறுகின்றது. தொரமடலாவ கண்காணிப்பு பகுதியில் வருடாந்த அடிப்படையில் சுற்றுச் சூழல் வளியில் உள்ள நுண்துகள்களின் ஒருமுகப்படுத்தல்களின் அளவீடுகளிலும் இடம்பெறுகின்றன.
அமில மழை கண்காணிப்பு
மாலே பிரகடன கருத்திட்டத்தின் கீழ் வளித் தர, ஒலி மற்றும் அதிர்வு கண்காணிப்பு அலகானது எல்லை கடந்த வளி மாசுறுதல் காரணமாக சாத்தியமான ஏதாவது அமில மழையை அடையாளங் காண்பதற்கான அமில மழை கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொள்கின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாதிரி இடம் தொரமடலாவ, மிகிந்தலையில் உள்ள மாலே கருத்திட்ட கண்காணிப்பு குழுவின் சிபாரிசின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ளது. அத்துடன் தனி மற்றும் தொகை திரட்டாளர்களால் ஈர வலயத்தில் திரட்டப்பட்ட மழை நீரின் பீஎச் பெறுமானம், கடத்தும் திறனுடைய அனயன்களின் செறிவாக்கம், கற்றயன்களின் செறிவாக்கம் மற்றும் வீழ்படிவுகளின் எண்ணிக்கை என்பன பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
புகை வெளியேற்றல் பெயர் பட்டியல் தயாரிப்பு
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வளி, ஒலி மற்றும் அதிர்வு கண்காணிப்பு அலகு புகை வெளியேற்றல் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கான தெற்காசிய பிராந்தியத்திற்கான பிராந்திய நிலையமாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. வளி மாசுறுதலை கட்டுப்படுத்தல், மற்றும் தடுத்தல், அதன் தெற்காசியாவுக்கான எல்லை கடந்த தாக்கங்கள் தொடர்பான மாலே பிரகடனத்தின் கீழ் 2012 மே மாதத்தில் தேசிய, சர்வதேச பயிற்சி செயலமர்வுகள் இடம்பெற்றன. தேசிய பயிற்சியின் பிரதான நோக்கம் யாதெனில் புகை வெளியேற்றல் பெயர்பட்டியல் தொடர்பான ஆரம்ப கட்ட அனுபவங்களை வழங்குவதுடன் பங்காளர் அமைப்புகள் ஊடாக தரவு திரட்டல் வலைபின்னலொன்றை ஆரம்பிப்பதாகும். சர்வதேச பயிற்சியின் பிரதான நோக்கம் யாதெனில் வளி தர முகாமைத்துவத்தில் பிரதான தேவைப்பாடொன்றாகவுள்ள ஒருங்கிணைந்த மதிப்பிடல் அமைப்பாக்கத்தின் அபிவிருத்தி மற்றும் புகை வெளியேற்ற பட்டியல் தொகுத்தல் தொடர்பான முதற்தர அனுபவத்தை வழங்குவதுமாகும். 2012 இன் இறுதியளவில் அனைத்து பங்கேற்ற நாடுகளும், காணப்படுகின்ற தரவுகளை பயன்படுத்தி 2015 ஆம் ஆண்டுக்கான புகை வெளியேற்ற பெயர் பட்டியலை தயாரித்தன.
ஒலி மற்றும் அதிர்வு அளவீடுகள்/ தொழில்துறை ஒலி அளவீடுகள்
இலங்கை சமூகத்தில் பொது இரைச்சலை ஏற்படுத்தி பிரதான சூழலில் பிரச்சினையை தோற்றுவிப்பதாக ஒலி மாசுறுதல் காணப்படுகின்றது. தொழில்துறை நடவடிக்கைகளினாலும், சமூக செயற்பாடுகளினாலும் ஏற்படுகின்ற ஒலி மாசுறுதல் பற்றி பல முறைப்பாடுகளை ஆய்வு கூடம் பெறுகின்றது. ஒலி தொடர்பான தொழில்நுட்ப நிபுணர்களை உள்ளடக்கியதாக தேசிய ஒலி கட்டுப்பாடு ஒழுங்குவிதிகளை திருத்துவதற்கு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட புதிய ஒழுங்குவிதி செயற்பாட்டு கோவையின் தயாரிப்பின் பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன. இணைக்கப்பாட்டு கண்காணிப்புக்கான ஒலி அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மேலாக, வாடிக்கையாளர்களினால் வர்த்தக அடிப்படையில் கோரப்படுகின்ற ஒலி மட்ட அளவீடுகளுக்காக ஆய்வுகூடமானது ஈடுபடுகின்றது.
வாகன ஒலி எழுப்பு கட்டுப்பாட்டுக்கான ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் விடுக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்களினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒலி மாசுறுதல் கட்டுப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாகன ஒலி எழுப்பில் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டமும் அமுல்படுத்தப்பட்டது.
இதேவேளையில் அலகானது போக்குவரத்து துறை, மின் உற்பத்தி மற்றும் தொழில்துறை செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற தரம் குறைந்த சுவட்டு எரிபொருட்கள் வளி மாசுறுதலுக்கான பிரதான மூலமாக இருப்பதால் சுவட்டு எரிபொருளின் தரத்தை பரிசோதிப்பதற்கான அதன் பரிசோதனை வசதிகளை விரிவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. பரிசோதனைகளை வசதிகளின் விரிவாக்கமானது தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நியமங்களுடன் தொடர்பான ஏற்கனவேயுள்ள புகை வெளியேற்றலுடன் எரிபொருள் தரத்தின் இணக்கப்பாட்டை சரிபார்ப்பதற்கு எமக்கு உதவுகின்றது.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999