சுற்றாடல் மேம்பாட்டுக் கூறு
- Details
மத்திய சுற்றாடல் அதிகாரசபைத் தாபனக் கட்டமைப்பின் பிரதானமான பிரிவாக அமைவது சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வூட்டல் பிரிவாகும். அப்பிரிவின்கீழ் இயங்கி வருகின்ற சுற்றாடல் மேம்பாட்டுக் கூறின் நோக்காக (vision) அமைவது “சுற்றாடல் பேணலுக்கான மக்கள் செயற்பாட்டினைக் கட்டியெழுப்புவதாகும்”. இதன்பொருட்டு சுற்றாடல் பற்றிய புரிந்துணர்வு, கூருணர்வு, ஆர்வத்தைப்போன்றே இரசனையை ஏற்படுத்துவதும் சுற்றாடல் நேயமுள்ள உளப்பாங்குகளையும் பேணல்திறன்களையும் மெருகூட்டுவதன் ஊடாக சுற்றாடல்பேணல், முகாமைத்துவம் மற்றும் மேம்பாட்டுக்கான சமூக வடிவமைத்தலை உருவாக்குவது மேம்பாட்டுக் கூறின் அரும்பணிச் (Mission)செயற்பாங்காகும்.மேற்படி செயற்பாங்கினை ஈடேற்றுவதற்காக கீழே காட்டப்பட்ட விடயத்துறைகளின் ஊடாக சுற்றாடல் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
பிரதான சுற்றாடல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள்
- பொதுமக்களின் சுற்றாடல் அறிவு, புரிந்துணர்வு மற்றும் ஆர்வத்தை மேம்படுத்தும் பொருட்டு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகக் கல்விக்கான கற்றல் சாதனங்களை தயாரித்தலும் உற்பத்தி செய்தலும். உதா- சொபாகெத சஞ்சிகை, சுற்றாடல் செய்திகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பல்வேறு நூல்கள், சுற்றாடல்சார் தொலைக்காட்சி நாடகங்கள், சுற்றாடல் கீதங்கள், வீடியோ நிகழ்ச்சிகள்.....
- நிறுவன மற்றும் இலக்குக் குழுக்களுக்கான கல்வி, மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தல்.
- பல்வேறு தொனிப்பொருள் தொடர்பில் உலக சுற்றாடல் தினத்திற்கான தேசிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். உதா- உலக சுற்றாடல் தினம், உலக ஈரநிலத் தினம், உயிர்ப் பன்வகைமைத் தினம்......
- சனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் வைபவத்தின் அரங்காட்டுகைப் பணிகளை ஏற்பாடு செய்தலும் நெறிப்படுத்துதலும்.
- இலத்திரனியல் ஊடக நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்தல். உதா- சொபாகெத வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி/வானொலி கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல், குறுகிய தொலைக்காட்சி அறிவித்தல்களை படைத்தலும் பிரச்சாரம் செய்தலும்.
- நடப்பு சுற்றாடல் போக்குகள், விசேட சுற்றாடல் தினங்கள் மற்றும் பல்வேறு சுற்றாடல் சிக்கல் முகாமைத்துவம் பற்றி செய்தித்தாள்களுக்கான கட்டுரைகளைத் தயாரித்தல். செய்தித்தாள் அறிவித்தல்களைத் தயாரித்தல்,நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கான ஊடகத் தொகுப்பினை வழங்குதல், அன்றாட செய்திகளின் மேல்நோக்கு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் செயற்பொறுப்பு பற்றிய விமர்சன செய்திகளை உயர் முகாமைத்துவத்திற்கு வழங்குதல், அத்தகைய விமர்சனங்களுக்காக சம்பந்தப்பட்ட விடயப் பிரிவுகளுடன் இணைப்பாக்கம் செய்து பதில்களைத் தயாரித்து ஊடகங்களுக்கு வழங்குதல்.
- விசேட சந்தர்ப்பங்களில் வெகுசன ஊடகவியலாளர்களுக்கான செய்தித்தாள் கலந்துரையாடல்களை (media press ) ஏற்பாடு செய்தல்.
- நடப்புச் சுற்றாடல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள், பெருவாரியாகப் பரவும் நோய்களின் விரிவாக்கம் பற்றி முன்கூட்டிய தடுப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். உதா- டெங்குநோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம்
- சுற்றாடல் கல்விக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், விண்ணப்பிக்கின்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்களைப் போன்றே பாடசாலைகளுக்கும் நடமாடும் கண்காட்சிக் கூடச்சேவைகளை வழங்குதல்.
- மரநடுகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
- தேசிய கலாசார வைபவங்களுக்கான சுற்றாடல் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். உதா- கண்டி தலதா பெரஹெரா, அனுராதபுரம் பொசொன் வைபவம், கதிர்காமம் ஆடிப்பெருவிழா, தலவில்லு புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா.......
- சொபாகெத நிலையங்களை பேணிவருதலும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தலும். உதா- றூமஸ்ஸல மற்றும் அத்திடிய இயற்கை கள மையங்கள்.
- சமுதாய அமைப்புக்களைப் பதிவு செய்தலும் விண்ணப்பிக்கின்ற நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைப்பாண்மைத் தகவல்களை இணைப்பாக்கம் செய்தலும்.
- சனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் வைபவத்தின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகப் பிரிவின் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளலும் வைபவத்தின் ஊடக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தலும்.
- சனாதிபதி சுற்றாடல் முன்னோடி பதக்கமளிப்பு வைபவத்தின் ஊடக இணைப்பாக்கம்.
- தேசிய சுற்றாடல் முன்னோடி பாசறையின் ஊடக இணைப்பாக்கம்.
- மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகபூர்வ வெப் பக்கம் (web page), முகநூல் (FB) என்பவற்றுக்கான தகவல்களை பதிவேற்றம் செய்தலும் இற்றைப்படுத்துதலும்.
- இலங்கை சுற்றாடல் ஒழுங்குறுத்தலுக்கான தேசிய நிறுவனம் என்ற வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்சார் இடையீட்டினை சமூகமயப்படுத்துதல்.
- கவனிக்குக – இக்குறிப்பிற்கான அனுமதி கிடைத்ததன் பிறகு ஆங்கில, தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படும்.
Friday, 03 May 2024 10:10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு