SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் கல்வி அலகு

இலங்கையில் சுற்றாடல் தரம் தொடர்பான விடயங்கள் பற்றிய சுயமான ஒரு நடத்தை கோட்பாடுகள் கோவையை வகுத்தமைத்தல், தீர்மானம் எடுத்தல், செயற்பாட்டில் சிறந்த நடைமுறைகளுக்கு வழியொன்றை வகுத்தல் என்பவற்றை கவனத்திற் கொண்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவானது, தாபிக்கப்பட்டது.

பணி

ஆரோக்கியமான சுற்றாடலின் பாதுகாப்பிற்காகவும் பேணுகைக்காகவும் மக்களின் முனைப்பான பங்கேற்பை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்களிடையே பல்வேறு இலக்கு குழுக்களுக்கு கல்வியறிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்.

இலக்குகள்

சுற்றாடலுடன் தொடர்புடைய விடயங்களின் பளுவை தடுப்பதற்கும் சமகால பிரச்சினைகளின் தீர்வுகளை நோக்கியதாக தனியாகவும் கூட்டாகவும் பணிபுரிவதற்கு அறிவு, ஆற்றல்கள், மனோபாவங்கள், ஊக்குவிப்பு, அர்ப்பணம் என்பவற்றுடன், சுற்றாடல் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிய சம்பந்தப்பட்ட விழிப்பு மற்றும் அக்கறையுடன் இலங்கை சனத்தொகையை விருத்தி செய்தல்.

நோக்கங்கள்

  • மொத்த சுற்றாடல் மற்றும் சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து கூருணர்வு உடையதாக இலங்கையில் அனைத்து குழுக்களுக்குமிடையும் விழிப்புணர்வுகளை கட்டியெழுப்புதல்.

  • மொத்த சூழல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளின் அடிப்படை புரிந்துணர்வு மற்றும் அனுபவத்துடனான பரந்த அறிவுப் பரப்பை விருத்தி செய்தலும், அதனோடு இணைந்த பிரச்சினைகள் மற்றும் இக்கட்டான பொறுப்புகளுக்கு முன்னிலைவகிக்கக்கூடிய மனிதநேயம் மற்றும் அதில் பங்களிப்பும்.
  • சுற்றாடல் மேம்பாடு மற்றும் பாதுகாப்பில் முனைப்பான பங்களிப்பை ஊக்குவித்தலும் சுற்றாடல் மீதான அக்கறையின் மனோபாவத்தை விருத்தி செய்தலும்.
  • சுற்றாடல் பிரச்சினைகளை அடையாளங்கண்டு, அலசி ஆராய்வு செய்து தீர்ப்பதற்கான திறன் அபிவிருத்தியை மேம்படுத்தல்.
  • சுற்றாடல்சார் பிரச்சினைகளின் தீர்வுகளை நோக்கிய வேலைப்பணிகளில் புரிந்துணர்வு, திறன்கள், சுய ஆர்வம் என்பவற்றில் பங்குபற்றுலை பெறுவதோடு அனைத்து மட்டங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் முனைப்பான பங்களிப்புக்கு வாய்ப்புக்ககளை வழங்குதல்.

சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவானது உத்தேச நோக்கங்கள் மற்றும் இலக்குகளை நோக்கி நகரும் தற்கால, இடைக்கால, குறுங்கால, நீண்ட கால உபாய முறைகளையும், திட்டங்களையும் விருத்தி செய்கிறது. சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவானது கீழ் மட்டத்திலிருந்து இலங்கையின் அனைத்து குழுக்களினதும் பங்கேற்பினை பரந்த அடிப்படையிலாக ஊக்குவிப்பதற்கு வினைத்திறன்மிக்க சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்வைப்பதற்கு அனுமதிக்கின்ற உபாயமுறைகளின் இயைந்ததான செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கின்றது.

சுற்றாடல் கல்வி விழிப்புணர்வு பிரிவின் செயற்பாடுகள்.

  1. சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டங்கள்
  • கல்வித் திணைக்களத்தின் மாகாண, வலய, கோட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.

  • அதிபர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.

  • ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.

  • சு.மு. நிகழ்ச்சித்திட்டத்தில் ஆணையாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்.

  • சுற்றாடல் முன்னோடிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி.

  • பதக்கம் பெறுவர்கள் மற்றும் அங்கத்துவம் என்பவற்றை அதிகரித்தல்.

  • சு.மு. நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய பொருட்களை தயாரித்தல்.

  • பாடசாலை மட்டத்தில் சுற்றாடல் கருத்திட்டங்களை அமுல்படுத்தல்.

  • சனாதிபதி பதக்க வெற்றியாளர்களுக்கான சுற்றாடல் கருத்திட்டங்களின் அமுலாக்கம்.

  • மாவட்ட சுற்றாடல் முன்னோடி செய்தி மடல்களை அச்சிடல்.

  • சுற்றாடல் முன்னோடி தேசிய முகாம்களை ஏற்பாடு செய்தலும் நடாத்தலும்.

  • சனாதிபதி பதக்கங்களை வழங்குதல்.

  • முன்பள்ளி மட்டத்தில் சுற்றாடல் கல்வி செயற்பாடுகளின் விருத்தி செய்வதற்கான செயலமர்வுகள்.

  • சிறுவர் சுற்றாடல் கழகங்களை அமைத்தல்

  1. கல்விசார் பொருட்களை தயாரித்தல் (சுலோகங்கள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய பொருட்கள்).
  1. இல்லத்தரசிகளுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் – உள்ளூர் மட்டத்தில் சுய உணவு உற்பத்தியில் நம்பிக்கையை பெறுவதற்காக வீட்டுத் தோட்ட உருவாக்குகையை ஊக்குவித்தல் (திவி நெகும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக).
  1. ஊக்குவிப்பு கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல்.

  2. இயற்கை கள நிலையங்களில் நடைமுறை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
  1. பசமை பூங்காக்களை தாபித்தல்.

  1. ம.சு.அ. கேட்போர் கூடத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கும், பல்வேறு தரப்பினர்களுக்கும் சமகால விடயங்கள் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.

  2. சுற்றாடல் பற்றிய சமகால பாரதூரமான விடயங்களை ஒழிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட சமகால நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல் விசேட தின நிகழ்ச்சிகள்.

  3.  தேசிய மத, கலாசார மற்றும் வரலாற்று ரீதியான சந்தர்ப்பங்களில் சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

  4. மாவட்ட மட்டத்தில் (சுவசர தக்சலாவ) சிறந்த பாடசலைகளுக்கு சுற்றாடல் விருது வழங்கல்.

  5. அரசாங்க, அரசாங்க சார்பற்ற நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகள்.

  6. இலங்கை பசுமை இளைஞர் கழக நிகழ்ச்சிகள்.

  7. தேசிய சுற்றாடல் கல்வி நிறுவனத்திற்கான பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல்.

Friday, 03 May 2024 10:09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்