SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல், மேம்பாட்டு, தகவல் சேவைகள்

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தில் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக பல்வகை இலக்குக் குழுக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றாடல் கல்வியை வழங்குவது மத்திய சுற்றாடல் அதிகாரபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் அலகின் பொறுப்பாகும்.

• முன்பள்ளி சிறார்கள் முதல் பொது மக்கள் வரையிலான பல்வகை குழுக்களை இலக்காகக் கொண்டு இந்த அலகினால் சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.
- முன்பள்ளி நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்.
- தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றாடல் சிறுவர் கழக நிகழ்ச்சித்திட்டத்தை செயல்படுத்துதல்.
- தரம் 6 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை செயல்படுத்துதல்.

• சுற்றாடல் முன்னோடி மன்றங்கள் மற்றும் பாடசாலையை விட்டு விலகியவர்களுக்கான பசுமை இளைஞர் கழக நிகழ்ச்சித்திட்டம்.
• தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுனர்களுக்கான பசுமைத் தலைவர் நிகழ்ச்சித்திட்டம்.

சுற்றாடல் மேம்பாட்டு சேவை

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் மேம்பாட்டு அலகு பொது மக்களுக்கும் பல்வேறு இலக்கு குழுக்களுக்கும் பல சேவைகளை வழங்குகிறது.
விழிப்பூட்டலை உயர்த்துவதற்கும் சுற்றாடல் பாதுகாப்புச் செய்திகளை பரவச்செய்வதற்கும் மேம்பாட்டு அலகினால் தன்னார்வ அடிப்படையில் கீழே குறிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


• வேண்டுகோளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் நடாத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வளவாளர்களாக பங்குபற்றுதல்.
• வேண்டுகோளின் அடிப்படையில் கண்காட்சிகளில் பங்கேற்றல்.
• விழிப்பூட்டல் செயற்பாடுகளுக்கு துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வழங்குதல்.
• மத்திய சுற்றாடல் அதிகாரபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றாடல் தொடர்பான வீடியோக்களை அதன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இலவசமாக வழங்குதல், அவற்றை தேவையானவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
https://www.youtube.com/channel/UCAJe39mKx2LACmYIjpUs6XQ

• மத்திய சுற்றாடல் அதிகாரபையினால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்படுகின்றன, அவற்றை தேவையானவர்கள் பார்வையிடலாம்.
https://www.facebook.com/CEASriLanka

Tuesday, 29 August 2023 07:33 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்