SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. செயற்பாட்டில் ஆலோனை/ பொதுமக்கள் பங்கேற்பு

இலங்கை சு.தா.ம. செயற்பாட்டில் பொதுமக்கள் பங்கேற்பு ஒரு முக்கிய அம்சமாகும். பொதுமக்கள் பங்கேற்றலுக்கான ஏற்பாடு, தேசிய சுற்றாடல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது

ஒரு சு.தா.ம. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் 30 தினங்களுக்குரிய கட்டாயமான காலப்பகுதியில் சு.தா.ம. அறிக்கை தொடர்பான பொதுமக்கள் பரிசீலனை மற்றும் கருத்துரைக்காக தேசிய சுற்றாடல் சட்டமானது ஏற்பாடு செய்தகொடுக்கின்றது. சு.தா.ம. அறிக்கையானது பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப, சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படுகிறது. இந்த அறிக்கைகள் பொதுவாக பொதுமக்கள் பரிசீலனைக்காக ம.சு.அ. தலைமையக நூலகம், தொடர்புடைய பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச சபையில் வைக்கப்படுகின்றது. 30 நாட்களுக்குள் ம.சு.அதிகாரசபைக்கு அல்லது தொடர்புடைய கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு தமது கருத்துக்களை பொதுமக்களில் எவரெனும் தெரிவிக்க முடியும். கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மை சு.தா.ம. அறிக்கை தொடர்பில் 30 நாட்களுக்குள் பரிசீலனை மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பொதுமக்களை அழைத்து தேசிய பத்திரிகைகளில் அறிவித்தல்களை வெளியிடும். சு.தா.ம. அறிக்கையை எங்கு, எப்போது பரிசீலிக்கப்பட முடியும் என்பதை அறிவித்தல் குறிப்பிட்டுரைக்கும். பிரதிபண்ணல் கட்டணங்களை செலுத்தி கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மையிடமிருந்து சு.தா.ம. அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு. பொதுமக்கள் விசாரணையை பொதுமக்கள் ஆர்வமொன்றாக க.அ. முகவராண்மை கருதுகின்றபோது அவ்வாறான விசாரணையை நடத்துவதற்கு அது தற்றுணிவு கொண்டுள்ளது.

பெற்றுக் கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்துரை பதிலுக்காக கருத்திட்ட பிரேரணையாளருக்கு அனுப்பப்படல் வேண்டும். கருத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகள் ஊடாகவும் கருத்திட்ட பிரேரணையாளர் பதில் அளித்தல் வேண்டும்.

கட்டாயமான 30 நாட்களுக்கு பொதுமக்கள் கருத்துக்களுக்காக ஆ.சு.ப. அறிக்கைகளை வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இல்லை. எவ்வாறாயினும் ஆ.சு.ப. அறிக்கை பொதுமக்கள் ஆவணமொன்றாக கருதப்படும் என்பதோடு, பொதுமக்களின் பரிசீலனைக்காக வெளிப்படையாக வைக்கப்படும்.

மேற்படி கட்டாய தேவைப்பாட்டுக்கு மேலதிகமாக கருத்திட்ட பிரேரணையாளர்கள்சு.தா.ம. ஆய்வு காலப் பகுதியில் உள்ளூர் பொதுமக்களுடன் முறை சாரா கலந்துரையாடல்/ ஆலோசனைகளை மேற் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். கருத்திட்டம் பற்றிய சரியான தகவல்களை உள்ளூர் மக்கள் பெறுகின்றனர் என்பதை கருத்திட்ட பிரேரணையாளர் உறுதிப்படுத்தல் வேண்டும். கருத்திட்டத்தினால் உள்ளூர் மக்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டால், கருத்திட்ட பிரேரணையாளர் அவர்களுடன் கலந்துரையாடி தாக்கங்களை குறைப்பதற்கு தணிப்பு நடவடிக்கைகளை பிரேரிப்பதில் அவர்களது ஆதரவை பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.

Monday, 26 August 2013 11:47 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 airwaterIndex

NEA202122

Press Sinhala-01

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
New Year 2023 To mark the commencement of the New Year 2023, the... மேலும் வாசிக்க
Service Appreciation 2023 In conjunction with the celebrations of the New Year... மேலும் வாசிக்க