SinhalaSriLankaEnglish (UK)

முதலீட்டு சபையின் பதிவு செய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளின் இட சிபாரிசுகளும் சு.பா. அனுமதிப்பத்திரத்திற்கான இணக்கப்பாட்டை வழங்குதலும்

திருத்தச் சட்டங்களினால் திருத்தப்பட்டவாறு (1980 இன் 43 ஆம் இலக்கம், 1983 இன் 21 ஆம் இலக்கம், 1992 இன் 49 ஆம் இலக்கம், 2002 இன் 9 ஆம் இலக்கம்) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 17(2) இன் கீழ், மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் இலங்கை முதலீட்டுச் சபையும் 1996 இல் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன.

இந்த உடன்படிக்கையின் கீழ் முதலீட்டுச் சபை அங்கீகரித்த கருத்திட்டங்களிலிருந்து வெளிவருகின்ற தொழில்துறை சார் மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு ம.சு.அ. முதலீட்டு சபையுடன் ஒர் ஒருங்கிணைப்பை செய்கின்றது.

இதன் பிரகாரம், சுற்றாடல் மாசுக் கட்டுப்பட்டு பிரிவினால் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன;

  • 2008.01.25 ஆம் திகதியிட்ட 1533/16 ஆம் இலக்க வர்த்தமானியில் குறித்துரைக்கப்பட்ட “ஏ”, “பீ”, “சீ” பட்டியல்களின் கீழ் வருகின்ற தொழில்துறைகளுக்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களுக்கான இணக்கப்பாட்டை வழங்குகின்றது. சுற்றாடல் மாசுக் கட்டுப்பட்டு பிரிவானது, தொழில்துறைகளினால் பின்பற்றி ஒழுக வேண்டிய பொருத்தமான நிபந்தனைகளுடன் உத்தேச கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் சிபாரிசை வழங்குவதற்கான இணக்கப்பாட்டையும் வழங்குகின்றது.
  • இணக்கப்பாட்டு கண்காண

  • முதலீட்டு சபை கருத்திட்டங்கள் தொடர்பான நெருக்கடியான நிலைமைகள் பற்றிய முறைப்பாடுகளை பரிசீலித்து தகவல்களை பெற்றுக் கொள்ளுவதன் மூலம் மாசுறுலை குறைத்தல் மற்றும் சுற்றாடலை நல்ல நிலைமையில் பேணுதல் குறித்தும் தொழில்துறையாலர்களுக்கும் சாதாரண பொதுமக்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல்.
Friday, 14 October 2022 04:38 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு