SinhalaSriLankaEnglish (UK)

இயற்கை வள முகாமைத்துவம் மற்றும் கண்காணித்தல் அலகு

Natural Resources Management & Monitoring Unit of the Central Environmental Authority, holds the responsibility of management of country’s natural resources, by assisting other relevant agencies involved in management of natural resources, and guiding and co-ordination with the Provincial and District offices of the Authority.

Functions of this unit include declaring Environmental Protected Areas, issuance of Environmental Recommendations for non-prescribed projects, formulation of regulations under the provisions of the National Environmental Act, preparation, development and publishing of Environmental Guidelines pertaining to management of natural resources, and implementation of National Wetland Action Plan.

Main Functions of the Unit

தேசிய ஈரநில செயல்திட்டத்தின் அமுலாக்கம்

தேசிய ஈரநில கொள்கை 2006 இல் வெளியிடப்பட்டது. தேசிய ஈரநில முகாமைத்துவ செயல்திட்டத்தின் அமுலாக்கமானது வருடாந்தம் பெப்ரவரி 02 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற தேசிய ஈரநில தினத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை பேணுகைக்கான சர்தேச ஒன்றியம் (IUCN) மற்றும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவகம் (IWMI) என்பவற்றுடன் இணைந்து 2006 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஈரநில கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசங்களை பிரகடனப்படுத்தல்

1980 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டமானது, வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையொன்றினூடாக ம.சு.அ. சபையினால் சுற்றாடல் பாதுகாப்பு பகுதியாக குறிப்பிடப்பட்ட பகுதியை பிரகடனப்படுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அனுமதியளிக்கின்ற ஏற்பாடுகளை கொண்டுள்ளது. ம.சு.அ. சுற்றாடல் பாதுகாப்பு பகுதியொன்றாக ஒரு பிரதேசத்தை பிரகடனப்படுத்தியவுடன், தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏதாவது ஏற்பாடொன்றுடன் முரண்படுகின்ற ஏதாவது சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள ஏதாவது திட்டமிடல் நிகழ்ச்சி அல்லது கருத்திட்டத்தை அந்த பிரதேசத்தில் இயங்கவிடாமல் செய்ய முடியும்.

தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய பின்வரும் பிரதேசங்கள் சுற்றாடல் பாதுகாப்பு பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன;

  1. முத்துராஜவெல சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2006 ஒக்டோபர் 13 ஆம் திகதிய 1466/26 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  2. தலங்கம சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2007 மார்ச் 05 ஆம் திகதிய 1487/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  3. கிரெகரி வாவி சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2007 மார்ச் 05 ஆம் திகதிய 1487/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  4. நக்கீள்ஸ் சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2007 ஜூலை 23 ஆம் திகதிய 1507/9 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  5. மாரகல மலைத்தொடர் சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2008 ஆகஸ்ட் 01ஆம் திகதிய 1560/26 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  6. வலவுவேவத்த-வதுரான சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2009 ஏப்ரல் 24 ஆம் திகதிய 1598/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  7. பொல்கொட சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2009 டிசம்பர் 30 ஆம் திகதிய 1634/23 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  8. ஹந்தான சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசம் (2010 பெப்ரவரி 17 ஆம் திகதிய 1641/28 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

தே.சு. சட்டத்தின் 32 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குதல்

  1. உயர் சரிவு கொண்ட பிரதேசங்களில் வருடாந்த பயிர்களின் பயிர்ச்செய்கையை தடுத்தல் (2006 ஆகஸ்ட் 04 ஆம் திகதிய 1456/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  2. மண் மற்றும் இரத்தினக்கல் போன்றவற்றின் ஆய்வு, அகழ்வு மற்றும் பிரித்தெடுத்தல் கருவிகளின் பயன்பாட்டை தடுத்தல் (2006 ஜூலை 17 ஆம் திகதிய 1454/4 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

குறித்துரைக்கப்படாத செயற்பாடுகள்/ கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் சிபாரிசுகளை வழங்குதல்

தே.சு. சட்டத்தின் பகுதி IV C இல் ஏற்பாடுகளின் கீழ் குறித்துரைக்கப்படாத தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை நிர்மாணித்தல், 99 அறைகளுக்கு குறைவான ஹோட்டல்களை அமைத்தல், ஆதன அபிவிருத்திக்கான காணிகளை துண்டு பிரித்தல், மரங்களை வெட்டுதல், ஆற்றங்கரை அகழ்வு, கனிப்பொருள் மூலவளங்களின் அகழ்வாரச்சி, அத்தகைய சிபாரிசுகளை வழங்குவதற்கான காணி அதிகாரம் போன்ற செயற்பாடுகளுக்கு சுற்றாடல் சிபாரிசுகளை வழங்குதல் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாகாண அலுவலகங்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது

இயற்கை மூலவளங்களின் முகாமைத்துவம் தொடர்பான வழிகாட்டல்களின் விருத்தி

இயற்கை வளங்கள் முகாமைத்துவத்திற்கான வழிகாட்டி தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.

மண் அகழ்வு தொடர்பான தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றாடல் தாக்கம் தொடர்பில் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒரு பயிற்சி கைந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நீர்வீழ்ச்சிகளின் பேணுகைக்கான நடவடிக்கை

நீர் வீழ்ச்சிகளின் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 383 நீர் வீழ்ச்சிகைளில் சிறிய நீர் மின்சார பிறப்பாக்க கருத்திட்டங்களுக்கான அங்கீகரித்தலை வழங்குவதில்லை என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

உயிரியல் சூழலியல், வரலாற்று சார் முக்கியத்துவமான மரங்களின் பாதுகாப்பு, இலங்கையிலுள்ள கலாசார ரீதியாக முக்கியத்துவமிக்க தனித்துவமான அல்லது அரிய இடங்களை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புக்கள்

காலோசிதமான தேவைப்பாடாக அடையாளங் காணப்பட்ட அத்தகைய இடங்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்பூட்டலானது சுருக்க விபரத்தை வழங்கும் அடையாளப் பதாகைகளின் நிர்மாணம் மற்றும் இடங்கள் மற்றும் மரங்கள் பற்றிய படங்கள் மூலமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு நோக்கம் யாதெனில் இலங்கையின் இயற்கை வளங்களின் பாதுகாப்பில் பொதுமக்கள், தனியார் துறை மற்றும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமாகும்.


Friday, 03 May 2024 04:52 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்