SinhalaSriLankaEnglish (UK)
  • 6C4A7869 1.jpg
  • 6C4A7987 1.jpg
  • aa9.jpg
  • img10.jpg
  • IMG_2750 1.jpg
  • sliderN3.jpg
  • sliderN5.jpg
  • sliderN6.jpg
  • sliderN7.jpg
  • sliderN8.jpg
  • thumb01.jpg
  • thumb02.jpg
  • WhatsApp Image 2024-06-06 at 09.28.57 1.jpg

  

Minister New டாக்டர் தம்மிகா படபெந்தி, சுற்றுச்சூழல் அமைச்சர்                 
   
                                 
Dy Minister
 திரு. ஆண்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் துணை அமைச்சர்                                                         
          
                                
 

New Chairmanமத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம்

 

 

DG Mr.Padmasiri

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
திரு பத்மசிறி மூன்மலே

 

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உங்களை வரவேற்கின்றோம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சு.தா.ம. செயற்பாட்டில் பொதுமக்கள் பங்கேற்பு ஒரு முக்கிய அம்சமாகும். பொதுமக்கள் பங்கேற்றலுக்கான ஏற்பாடு, தேசிய சுற்றாடல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


ஒரு சு.தா.ம. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் 30 தினங்களுக்குரிய கட்டாயமான காலப்பகுதியில் சு.தா.ம. அறிக்கை தொடர்பான பொதுமக்கள் பரிசீலனை மற்றும் கருத்துரைக்காக தேசிய சுற்றாடல் சட்டமானது ஏற்பாடு செய்துகொடுக்கின்றது. சு.தா.ம. அறிக்கையானது பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப, சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படுகிறது. இந்த அறிக்கைகள் பொதுவாக பொதுமக்கள் பரிசீலனைக்காக ம.சு.அ. தலைமையக நூலகம், தொடர்புடைய பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச சபையில் வைக்கப்படுகின்றது. 30 நாட்களுக்குள் ம.சு.அதிகாரசபைக்கு அல்லது தொடர்புடைய கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு தமது கருத்துக்களை பொதுமக்களில் எவரெனும் தெரிவிக்க முடியும். கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மை சு.தா.ம. அறிக்கை தொடர்பில் 30 நாட்களுக்குள் பரிசீலனை மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பொதுமக்களை அழைத்து தேசிய பத்திரிகைகளில் அறிவித்தல்களை வெளியிடும். சு.தா.ம. அறிக்கையை எங்கு, எப்போது பரிசீலிக்கப்பட முடியும் என்பதை அறிவித்தல் குறிப்பிட்டுரைக்கும். பிரதிபண்ணல் கட்டணங்களை செலுத்தி கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மையிடமிருந்து சு.தா.ம. அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு. பொதுமக்கள் விசாரணையை பொதுமக்கள் ஆர்வமொன்றாக க.அ. முகவராண்மை கருதுகின்றபோது அவ்வாறான விசாரணையை நடத்துவதற்கு அது தற்றுணிவு கொண்டுள்ளது.


பெற்றுக் கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்துரை பதிலுக்காக கருத்திட்ட பிரேரணையாளருக்கு அனுப்பப்படல் வேண்டும். கருத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகள் ஊடாகவும் கருத்திட்ட பிரேரணையாளர் பதில் அளித்தல் வேண்டும்.
கட்டாயமான 30 நாட்களுக்கு பொதுமக்கள் கருத்துக்களுக்காக ஆ.சு.ப. அறிக்கைகளை வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இல்லை. எவ்வாறாயினும் ஆ.சு.ப. அறிக்கை பொதுமக்கள் ஆவணமொன்றாக கருதப்படும் என்பதோடு, பொதுமக்களின் பரிசீலனைக்காக வெளிப்படையாக வைக்கப்படும்.
மேற்படி கட்டாய தேவைப்பாட்டுக்கு மேலதிகமாக கருத்திட்ட பிரேரணையாளர்கள்சு.தா.ம. ஆய்வு காலப் பகுதியில் உள்ளூர் பொதுமக்களுடன் முறை சாரா கலந்துரையாடல்/ ஆலோசனைகளை மேற் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். கருத்திட்டம் பற்றிய சரியான தகவல்களை உள்ளூர் மக்கள் பெறுகின்றனர் என்பதை கருத்திட்ட பிரேரணையாளர் உறுதிப்படுத்தல் வேண்டும். கருத்திட்டத்தினால் உள்ளூர் மக்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டால், கருத்திட்ட பிரேரணையாளர் அவர்களுடன் கலந்துரையாடி தாக்கங்களை குறைப்பதற்கு தணிப்பு நடவடிக்கைகளை பிரேரிப்பதில் அவர்களது ஆதரவை பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.

Monday, 26 August 2013 11:47 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

எமது சேவைகள்

சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) / ஆரம்ப சுற்றாடல் அறிக்கை (IEE)

 

அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...



சுற்றாடல் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள்

 

சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...

புவி சார் தகவலியல் முறைமை(GIS)/ தொலை உணர்வு (RS) சேவைகளை வழங்கல்

 

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் சேவைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

EPA All 

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்