145 கி.மீ. மொத்த நீளத்தையும் 2292 சதுர கி.மீ. ஆற்றுப்படுக்கையையும் கொண்ட இரண்டாவது மிகப் பெரிய நீர் தங்குமுகமான களனி கங்கை, அதன் அருகே அமைந்துள்ள தொழில்துறைகளின் துரித வளர்ச்சி காரணமாக இலங்கையில் அதிகம் மாசுபடுத்தப்படுகின்ற ஒரு ஆறாக உள்ளதோடு, அது அதிக சன நெரிசல் உள்ள நாட்டின் தலை நகரத்தின் ஊடாக பாய்ந்தோடுகின்றது.
களனி கங்கையில் நீர் மாசுறுதலின் பிரதான மூலங்களாக இருப்பவை ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத தொழில்துறை கழிவுகள், விவசாய கழிவு எச்சங்கள், உள்ளூர் மாநகர கழிவுப் பொருட்கள் போன்ற நில அடிப்படையிலான மூலங்களாகும். நீர் மாசுறுதலின் கனதியானது, களனி கங்கையின் நீர் தர அளவீடுகளை அவதானிக்கும்போது தெளிவாக தெரிகின்றதோடு, இது கொழும்பின் குடிநீர் வழங்கலுக்கு குழாய் நீருக்கான தேவையின் பெரும் பகுதியை நிறைவேற்றுகின்றது. களனி கங்கை கொழும்பு மாவட்டத்திற்கான குடிநீருக்கான பிரதான மூலமாக இருப்பதோடு, அம்பத்தலேயில், ஆற்றுமுகத்தின் 14 கிலோமீட்டரிலிருந்து நீர் வழங்கல் உள்ளெடுப்பு முறையையும் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் குறைந்த வருமான குடியிருப்புகளின் கழிவு வாய்க்கால், பெரும் எண்ணிக்கையான தொழில்துறைகளின் கழிவுகள் (விசேடமாக தோல் பதனிடல் மற்றும் உலோக முடிவுப் பொருள், பதனிடல் தொழில்துறைகளிடமிருந்து) வசதியாக களனி ஆற்றில் விடப்படுகின்றன.
மேலும் களனி கங்கையின் குறைவான அடையளவு ஆற்றுப்படுக்கைகளின் தாழ் மட்டம், அதிக மணல் அகழ்வு என்பவற்றின் காரணமாக நீர் சுமக்கத்தக்கதாக இன்மையினால் சமுத்திரத்திலிருந்து உப்பு நீர் உள்ளாதலுக்கு ஆற்றின் தாழ் அடையளவு உட்பட்டிருக்கின்றது. இங்கு பல்வேறு சந்தரப்பங்களில் அம்பத்தலை (சுமார் அதன் வெளியெற்றுகை முனையிலிருந்து 14 கி.மீ.) உப்பு பரப்பு உள்நோக்கி விஸ்தரிக்கப்பட்டு உள்ளது. அம்பத்தலையில் களனி ஆற்றிலிருந்து சுத்திகரிக்கப்படுகின்ற கொழும்புக்கான பாரிய நீர் வழங்கல் பாரதூரமான கவனத்திற்குரிய விடயமொன்றாக உள்ளது.
தொழில்துறை செயற்பாடுகள் மூலம் சுற்றாடலுக்கு கழிவு நீரை வெளியெற்றுவதானது 1980 ஆம் ஆண்டின் தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23(அ) இன் ஏற்பாடுகளின் கீழ் அமுல்படுத்தப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களினால் ஒழுங்குறுத்தப்படுகின்றது. சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு, தொழில்துறை ஒன்றிலிருந்து கழிவு நீரை சுற்றாடலுக்கு வெளியேற்றுவதற்கு சு.பா. அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றாடலுக்கு கழிவு நீரை வெளியேற்றுகின்ற தொழில்துறைகளானவை சு.பா.அ. பெற்றுக் கொள்வதற்கு அடிப்படை தகைமையாக பொருத்தமான நியமங்கள் வரை அவற்றின் கழிவு நீரை கையாள்வதற்கு வேண்டப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள், சுற்றாடலுக்கு கழிவுகளை வெளியேற்றுகின்ற அந்தந்த தொழில்துறைகளினால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நியமங்கள் மற்றும் தகுதிறன்களை குறிப்பீடு செய்யும்.
தொழில்துறைகளானது சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெறல் திட்டத்தினால் உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றின் கழிவகற்றல் தகுதிறன்களை நிறைவேற்றுவதை மதிப்பிடுவதற்கும் களனி கங்கையில் வெளியிடப்படும் மாசுறுதல் பொருட்களின் தொகையை கட்டுப்படுத்துவதற்குமான முறையினை கண்காணிப்பு பொறிமுறையொன்று காணப்படவில்லை.
களனி ஆற்றில் மாசுறுதல் நிலையம் மற்றும் அவற்றின் சில சுத்திகரிப்பின் நிலைமைகள் என்பன பீஎச், மின்சார நடத்தை, DO, BOD,COD, குளோரைட், தாதுப்பொருட்கள், நுண் உயிரியல் அளவீடுகள் தொடர்பில் 2003 ஆம் ஆண்டிலிருந்து பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. சில Pb மற்றும் Cr போன்ற பாரமான உலோகங்கள் கரைசலாக்கப்பட்ட வடிவங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. பகுப்பாய்வுகள் வெளிப்படுத்திய பிரதான ஆக்கக்கூறு யாதெனில், மானுடவியல் மூலங்கள் மற்றும் இயற்கை மூலங்களின் மாசுறுதல் கருவிகளினால் ஆற்று நீர் எதிர்மறையாக தாக்கப்பட்டிருக்கின்ற என்பதை வெளிப்படுத்தியது. கடல் நீர் அசுத்தமடைகின்ற ஆற்று நீரினுள் மண் அரிப்பு என்பன ஆற்று நீர் தரத்தை பாதிக்கின்ற இயற்கை செயற்பாடுகளுக்கும் பிரதான ஆற்றின் ஏழு மாதிரியிடல் இடங்களும் கிளையாறுகளின் ஐந்து மாதிரி இடங்களும் பல்வேறு செயற்பாடுகளின் மீதான மாசுறுதல் தாக்கத்தை கவனத்திற் கொண்டு தெரிவு செய்யப்பட்டன. மாதிரியிடல் இடங்கள், ஆற்று முகத்திலிருந்து, நிலப் பகுதி அவிசாவலை வரையான 58 கி.மி. அப்பால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அகலாங்கு |
நெட்டாங்கு |
மாதிரியிடல் அமைவிடம் |
6 57 14 | 80 13 12 | தல்துவ பாலம் |
6 58 37 | 80 11 39 | சீதாவக்க இறங்குதுறை |
6 55 02 | 80 05 53 | வக் ஓயா (கிளையாறு) |
பூகொட இறங்குதுறை | ||
6 56 38 | 80 08 18 | பூகொட எல (கிளையாறு) |
6 54 36 | 80 05 00 | ஹங்வெல்ல பாலம் |
6 54 26 | 80 03 57 |
புஸ்ஸெலி ஓயா (கிளையாறு) |
6 56 00 | 79 59 32 |
மகா எல (கிளையாறு) |
கடுவெல பாலம் | ||
6 56 21 | 79 58 09 | ரக்கஹவத்த எல (கிளையாறு) |
6 56 18 | 79 56 50 | வெளிவிட்ட பாலம் |
6 57 37 | 79 52 40 | விக்டோரியா பாலம் |
களனி ஆற்றின் மாதிரியிடல் இடங்கள்
களனி ஆற்றின் மாதிரியிடல் இடங்களின் வரைபடம்
நீர் தர சுட்டிகளை பயன்படுத்தி களனி கங்கையின் நீர் தரத்தை மதிப்பிடல்
2010 இலிருந்து 2012 வரையான நீர் தர தரவுகளை பயன்படுத்தி உத்தேச ம.சு.அ. உள்நாட்டு நீர் தர தராதரங்களுடன் இணைந்ததாக அனைத்து மாதிரியிடல் இடங்களுக்குமான நீர் தர சுட்டெண்ணை மதிப்பிடுவதற்கு, pH, Turbidity, கரைந்த ஒட்சிசன், உயர் இரசாயன ஒட்சிசன் தேவை, இரசாய ஒட்சிசன் தேவை, நைதரசன், பொசுபேட் மற்றும் குரோமியம் மற்றும் ஈயம் போன்ற நீரிலுள்ள பார உலோகங்களின் கரைதிறன் என்பன கவனத்திற் கொள்ளப்படுகின்றன. மொத்த கண்காணிப்பு காலத்திற்கான நுண் உயிரியல் பகுப்பாய்வு தொடராக மேற்கொள்ளப்படாததனால் அது நீர் தர குறியீட்டின் மதிப்பிடுவதை கவனத்திற் கொள்ளப்படவில்லை. மொத்த கண்காணிப்பு காலத்தில் அனைத்து மாதிரியிடல் இடங்களிலும் கழிவு தன்மை மற்றும் கலங்கல்தன்மை என்பன நியமங்களை விட அதிகரித்து காணப்பட்டன.
களனி கங்கையின் நீர் தரத்தின் சுருக்க விபரம்
இரத்தினக் கல் அகழ்தல், ஆற்று மணல் அகழ்வு போன்ற மானுட செயற்பாடானது ஆற்றுப் படுக்கைக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி அனைத்து மாதிரி அளவிடங்களிலும் ஆற்று நீரின் கலங்கல் தன்மை அதிகரிக்கின்றது. களனி கங்கையில் நீர் மாசுறுதலின் பிரதான மூலங்களில் ஒன்றாக இருப்பது நுண் உயிரியல் அசுத்தம் மற்றும் கலங்கல் தன்மை ஆகும். (நீர் கலங்கல் தன்மையானது நீரின் ஒளி கடத்தல் துகள்களின் அளவீடாகும்) நீரில் உள்ள கைவிடப்பட்ட துகள் பொருட்களின் அளவீடொன்றாக இருப்பதோடு, பொருட்களின் சிறப்புத்தன்மை, ஒருங்கமைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது. கலங்கல் தன்மை வேறுபாடானது தொடரான மழை, ஆற்றின் மேலோட்ட அகழ்வு செயற்பாடுகளின் காரணமாக எழத்தக்கதான காற்று நீருடனான படியும் துகள்களின் ஓட்டத்தின் உள்ளக தடையுடன் எப்போதும் இணைந்ததாக உள்ளது. மணல் அகழ்தல், இரத்தினக்கல் அகழ்வு என்பவற்றுடன் தொடர்பான செயற்பாட்டில் தாக்கம் செலுத்துகின்ற களங்கல் தன்மை மற்றும் நகர செயற்பாட்டின் கட்டுப்படுத்த முடியாத தாக்கமானது, அனைத்து மாதிரியிடல் இடங்களிலும் கண்காணிப்பு காலம் முழுவதும் நியமப் பெறுமானத்தை எப்போதும் விஞ்சியதாக உள்ளது.
ஹங்வெல்ல மற்றும் வெளிவிட்ட ஆகிய மாதிரியிடல் இடங்களில் நியமப் பெறுமானங்களில் இருந்து குறைந்தளவான அளவீடுகளும் குறைந்த திசை திருப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சீதாவக்க இறங்குதுறை மற்றும் விக்டோரியா பாலம் ஆகிய மாதிரியிடல் இடங்களில் அதிகளவு எண்ணிக்கையிலான பண்பளவுகளும் திரும்பல் அசைவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இருபத்திரண்டு இடங்களிலுமான நீர் தரம் குறியீடு குறைவாக இருப்பதோடு நீரின் புற உயிர் சூழலியல் நிலைமை பலயீனமானதாக உள்ளது.
களனி கங்கையின் உயர் நீர் தர சுட்டுப் புள்ளி வெளிவிட்டவில் அமைந்துள்ள (68) ஆற்றின் நடுப்பகுதியில் அறியப்பட்டுள்ளதுடன் துல்துவ (46) மற்றும் சீதாவக்க (51) பகுதியில் ஆகக் குறைந்த புள்ளி பதிவு செய்யப்பட்டுள்ளது.
துல்துவ, சீதாவக்க இறங்குதுறையில் ஆற்று நீரின் தரமானது ஆற்றின் கீழ் அடைவுடன் ஒப்பிடும்போது குறைவான தரத்தை கொண்டதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் நீரின் தரம் துரிதமாகவும் மோசடைந்து வருகின்றது. இரண்டு மாதிரியிடல் இடங்களினதும் உயிர்ச்சூழல் நிலைமை நீரின் தரம் குறைந்து வருவதை சுட்டிக் காட்டுகின்றது. சீதாவக்க இறங்குதுறையில் மாதிரியிடல் இடத்தில் சீதாவக்க தொழில்துறை பேட்டையிலிருந்து தொழில்துறை கழிவு நீரை பெறுகின்றது. அறவீடுகள் எப்போதும் COD (37%), BOD (13%) கரைந்த ஒட்சிசன் (43%) மற்றும் பார உலோகங்கள் (7%) என்பவை கலங்கள் தன்மையை விட அதிகரித்து காணப்படுகின்றன.
பூகொடை இறங்குதுறை, ஹங்வெல்ல பாலம், கடுவெல பாலம் ஆகிய ஆற்றின் மத்திய பகுதியில் மாதிரியிடல் இடங்களில் அதன் மேல் நீர் ஓட்ட பகுதியுடன் ஒப்பிடும் போது சிறந்த நீர்த்தன்மை காணப்படுகிறது. இது கிளையாறுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற கரைசல் தாக்கத்தின் காரணமாக இருக்கலாம். வெளிவிட்ட மற்றும் பூகொடை இறங்குதுறைப் பகுதிகளில் மாதிரிகளிலிருந்து உயர் தரத்திலான நீர் தர குறிகாட்டி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு பகுதிகளினதும் உயிர்சூழலிய தன்மை சிறப்பாக உள்ளது.
வக் ஓயா, பூகொட கால்வாய் போன்ற பிரதான கிளையாறுகளில் நீர் தர சுட்டி 51-59 இடைப்பட்டதாக காணப்படுவதோடு. உயிர்சூழலியல் தன்மை பலயீனமானதாக உள்ளது.
பியகம தொழில்துறை வலயத்திலிருந்து அசுத்தமான தொழில்துறை கழிவு நீரை கலந்துவருகின்ற ரக்கஹவத்தை மாதிரி இடத்தில் மிகவும் மோசமான, பலயீனமாக உள்ள சூழலியல் தகைமை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை மாசுறுதலை காட்டுகின்ற மொத்த கண்காணிப்பு காலப்பகுதியில் நியமப் பெறுமதியானது அநேகமான பண்பளவுகளையும் விஞ்சியுள்ளது. அளவீடுகள் COD (36%),BOD (7%) கரைந்த ஒட்சிசன் (27%) மற்றும் பார உலோகம் (7%) ஆகியவை அனைத்தும் கலங்கள் தன்மையைவிட அதிகரித்தே இருந்தன.
இரண்டாவது அசுத்தமான கிளையாறு மா ஓயாவாகும். அசேதன கழிவுகளின் வெளியேற்றத்தின் காரணமாக இது மிகவும் மாசடைந்த ஓர் இடமாக உள்ளது. அநேகமான சந்தர்ப்பங்களில் அளவீடுகள் COD (13%),BOD (60%) கரைந்த ஒட்சிசன் (80%) மற்றும் பார உலோகம் (7%) என்பன அதிகரித்த நிலைமையில் உள்ளது.
சில இடங்களில் சுத்தம் செய்யப்படாத அல்லது பகுதியளவு சுத்தம் செய்யப்பட்ட கழிவுகளை வாய்க்கால்களில் வெளியேற்றுவதன் காரணமாக அநேகமாக நுண் உயிரியல் மாசுபடுத்தல் ஏற்படுகின்றது (உதாரணமாக ஆற்றங் கரையில் வீட்டு மலசலகூடங்கள், ஹோட்டல்கள் என்பவற்றிலிருந்து வெளிவிடும் கழிவுகளால்). வருடாந்தம் மதிப்பிடப்படுகின்ற நீர் தர சுட்டிகள், அனைத்து மாதிரியிடல் இடங்களிலும் ஆற்று நீர் படிப்படியாக மோசமடைந்து வருகின்றது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
ஒவ்வொரு மாதிரி இடங்களுக்கும் எதிரான நீர் தர சுட்டி
மாதிரி அமைவிடங்கள் | தெரிவு I | தெரிவு II | ||||||
சுட்டி மதிப்பீடு | உயிர்ச்சூழல் நிலைமை | தரம் |
நிறக்குறியீடு |
சுட்டி மதிப்பீடு | உயிர்ச்சூழல் நிலைமை | தரம் | நிறக் குறியீடு | |
கிரிதிவித |
58 | பலவீனம் | D | ஒரேஞ்சு | 87 | சிறந்தது | B | பச்சை |
கொடுகொட |
57 | பலவீனம் | D | ஒரேஞ்சு | 81 | சிறந்தது | B | பச்சை |
ஒபாத |
53 | பலவீனம் | D | ஒரேஞ்சு | 71 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் |
முதுவிடிய |
50 | பலவீனம் | D | ஒரேஞ்சு | 63 | பலவீனம் | D | ஒரேஞ்சு |
ஜன்சன் பல்லியவத்த |
45 | பலவீனம் | D | ஒரேஞ்சு | 56 | பலவீனம் | D | ஒரேஞ்சு |
கிரிதிகொட |
54 | பலவீனம் | D | ஒரேஞ்சு | 65 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் |
இரண்டு தெரிவுகளின் பிரகாரம் மாதிரியிடல் அமைவிடங்களுக்கு எதிராக நீ.த.சு. வரைவு
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999