SinhalaSriLankaEnglish (UK)

ததுகம் ஓயா நீரின் நீர்த்தரம்

2011 ஏப்ரல் முதல் 2012 டிசம்பர் வரையான காலப்பகுதிக்கு ததுகம் ஓயாவில் நீர் தரத்தின் மதிப்பீட்டுக்கு ஆறு மாதிரி பரிசோதனை இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மாதிரி பரிசோதனை இடங்கள்

மாதிரி பரிசோதனை இடங்கள்: பு.நி.மு. இணைப்புகள்
மாதிரி பரிசோதனை முனை 1 (கிரிந்திவிட பாலம்) (44386380E, 0784148N)
மாதிரி பரிசோதனை முனை 2 (கொடுகொட பாலம்) (44381229E, 0787535N)
மாதிரி பரிசோதனை முனை 3 (ஓபதா பாலம்) (44380612E, 0789277N)
மாதிரி பரிசோதனை முனை 4 (முதுவடிய பாலம்) (44377962E, 0791871N)
மாதிரி பரிசோதனை முனை 5 (பல்லிய சந்தி பாலம்) (44377454E, 0788598N)
மாதிரி பரிசோதனை முனை 6 (கிரிந்திகொட பாலம்) (44376592E, 0786017N)


இரு தெரிவு சுட்டிகளின் பிரகாரம் நீர் தர சுட்டெண், உயிர்ச்சூழல் நிலைமை, தரம் மற்றும் நிறக் குறியீடு பற்றிய சுருக்க அறிக்கை

 

மாதிரி அமைவிடங்கள் தெரிவு I தெரிவு I II
  சுட்டி மதிப்பீடு உயிர்ச்சூழல் நிலைமை தரம் நிறக் குறியீடு           சுட்டி மதிப்பீடு உயிர்ச்சூழல் நிலைமை தரம் நிறக் குறியீடு          
கிரிதிவித   58 பலவீனம் D ஒரேஞ்சு 87 சிறந்தது B பச்சை
கொடுகொட  57 பலவீனம் D ஒரேஞ்சு 81 சிறந்தது B பச்சை
ஒபாத   53 பலவீனம் D ஒரேஞ்சு 71 ஓரளவு சிறந்தது C மஞ்சள்
முதுவிடிய    50 பலவீனம் D ஒரேஞ்சு 63 பலவீனம் D ஒரேஞ்சு

ஜன்சன் பல்லியவத்த

45 பலவீனம் D ஒரேஞ்சு 56 பலவீனம் D ஒரேஞ்சு
ஜன்சன் கிரிதிகொட   54 பலவீனம் D ஒரேஞ்சு 65 ஓரளவு சிறந்தது C மஞ்சள்


இரண்டு தெரிவுகளின் பிரகாரம் மாதிரியிடல் அமைவிடங்களுக்கு எதிராக நீ.த.சு. வரைவு

 

ததுகம் ஓயா நீரின் நீர்த்தரம்  

நீர் தர சுட்டியின் மதிப்பீட்டுக்காக பயன்படுத்தப்படுகின்ற அனைத்து அளவுகோள்கள் தொடர்பிலும் திருப்திகரமான நிலை ததுகம் ஓயா நீரின் தரத்தில் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காலம் முழுவதும் மேற்பரப்பு ஓட்டத்தை காட்டுகின்ற கலங்கல் தன்மை மற்றும் நுண்ணுயிரியல் மாசு என்பன எப்போதும் அதிகரித்திருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ததுகம் ஓயாவின் அனைத்து மாதிரி பரிசோதனை இடங்களிலும் நீரின் உயிர்ச்சூழல் நிலை பலவீனமானதாக இருப்பதை சுட்டிகள் காட்டுகின்றன. (பதினொரு அளவீடுகள் தொடர்பில் அனைத்து கண்காணிப்பு இடங்களுக்குமான நீர் தர சுட்டெண் 45-64 வரையான வீச்சில் உள்ளன)

ததுகம் மேல் நீரோட்டத்தின் நீர் தரமானது (கிரிந்திவிட, கொடுகொட) எப்போதும் தொழில்துறை சார் மாசுறுதலுக்கு எந்தவொரு சான்றையும் காட்டவில்லை. மேல் நீர் ஓட்டத்தின் மாசுபடலுக்குரிய தோற்றுவாயும் மிகவும் குறைவானதாகும். எப்போதும் அதிகரித்து காணப்படுபவை கலங்கல் நிலையும், நுண்ணுயிரியல் மாசுமாகும். மிக உயர் தர நீர்தர சுட்டி ஏனைய இடத்துடன் ஒப்பிடும் போது, கிரிந்திவிட (58), இரண்டாவது அதிகமானதாக (57) கொடுகொட ஆகிய மாதிரி பதிசோதனை இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் ஏனைய அளவீடுகள் இரண்டு வருட காலப்பகுதியிலும் நியமப் பெறுமானத்தை அரிதாகவே அதிகரித்து சென்றிருந்தன.

நடு ஓட்டத்திலிருந்து கீழ் ஓட்டத்துக்கான நீர் தரமானது உள்ளூர் மற்றும் பல்வேறு வழி மூலங்களுடன் ஒப்பிடும் போது தொழில்துறை மாசுறுதல் சான்றையே சுட்டிக் காட்டுகின்றன. இது ஓபாதவிலிருந்து கீழ் நீரோட்டம் வரை தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கீழ் நோக்கியதாக இப்பகுதி வரையான நீரில் கரைந்த ஒட்சிசனின் படிப்படியான வீழ்ச்சி மற்றும் இரசாயண ஒட்சிசன் தேவையின் உயர் மட்டம் என்பன அநேகமான நேரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார உலோகங்களுக்கு பெறப்பட்ட பெறுமதிகள் அனைத்து கண்காணிப்பு இடங்களுக்குமான 2012 ஆகஸ்ட் வரையான மொத்த கண்காணிப்பு காலப் பிரிவில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தேச நியமங்களுக்கு கணிசமான அளவு கீழ் மட்டத்தில் இருக்கின்ற நைதரசன், பொசுபேட் போன்ற பார உலோகங்களை கண்டு பிடிக்க பயன்படுத்தப்பட்ட முறையின் கண்டுபிடிப்பு வரையறைகளை விட குறைவானதாக இருக்கின்றது. கரைக்கப்பட்ட குரோமியத்தின் கணிசமான அதிகரிப்பானது (0.01 மி.கி./லீ இருந்து 0.04 மி.கி./லீ) ஆகஸ்ட் 2012 இருந்து ஓபதாவிலிருந்து கீழ் நீரோட்டம் வரை அவதானிக்கப்பட முடிகின்றது. எவ்வாறாயினும் ம.சு.அ. சபையினால் உத்தேசிக்கப்பட்ட சுற்றுப்புற நீர் தர நியமங்களின் மட்டத்திற்கு கீழேயே அது உள்ளது. இது எதிர்காலத்தில் பல மாதங்களுக்கு கவனமாக அவதானிக்கப்படல் வேண்டும். ஆனால் மேலும் ஆற்றின் பின்னைய பகுதிக்கு பெறப்பட்ட சிஓடி (COD) இற்கான பெறுமதிகள் அநேகமான காலங்களில் நியமப் பெறுமானத்தையும் விட ஒப்பீட்டு ரீதியில் உயர்வானதாக உள்ளது. அனைத்து விதமான மாசுறுதல் சுட்டி காட்டிகளுக்குமாக வருடத்தின் குறைவான, உயர்வான ஓட்ட விகிதங்களுக்கு பெறப்பட்ட பெறுமானங்களுக்கு இடையே கணிசமான வேறுபாடொன்று காணப்படுகின்றது.

ததுகம் ஓயாவின் கீழ் நோக்கிய திசையில் நீ.த.சுட்டியானது 45 வரை படிப்படையாக வீழ்ச்சியடைகின்றது. நுண்ணுயிரியல் மாசானது மேல் நீரோட்டத்துடன் ஒப்பிடும் போது கீழ் ஓட்டத்தில் ஓபதா வரை முக்கியத்துவம் குறைந்ததாக காணப்படுகிறது.

கலங்கல் தன்மை, முகப்பு அசுத்தம் என்பவை நீங்கலாக மதிப்பிடப்பட்ட நீர் தர சுட்டெண் ஆனது, ததுகம் ஓயாவின் மேலோட்ட இடத்தில் உள்ளூர் மூலங்கள் மிகவும் முன்னணியில் இருப்பதை தெளிவாக காட்டுகின்றன. (கிரிந்திவிட (87%) மற்றும்  கொடுகொட (81%)) நீரின் தரமானது சிறந்த மட்டத்திற்கு கணிசமான அளவு மேம்படுத்துவதற்கு கழிவு வாய்க்கால்களால் நீக்கம், நகர வெளியேற்றுகை போன்ற உள்ளூர் மூலங்களை கட்டுப்படுத்துவதனூடாக இடம்பெற முடியும்.

மாதிரி பரிசோதனை இடங்களின் விடயங்களைப் பொறுத்த வரையில் உள்ளூர் அசுத்தத்தினை நீக்கி, ஓரளவு சிறந்த மட்டத்திற்கு ஓபதா நீர் சற்று அதிகரிக்க முடியும். கீழ் நீரோட்டத்தினது ஓபதா வரை உள்ளூர் மூலங்களின் கட்டுப்பாட்டுடன் நீரின் தரத்தை மொத்தமாக முன்னேற்றுவது மிகவும் சிரமமாகும். நீர்த் தரத்தின் மோசமான நிலைக்கு மொத்தமான பங்களிப்பு தொழில்துறை மாசுறுதலாகும். ஆதலால் ததுகம் ஓயாவின் நீர் தரத்தின் மேலதிக சீர்குலைவை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

Monday, 04 November 2013 06:40 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்