மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கையின் பாடசாலை முறைமையினுள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்தவூம் அதற்கான அங்கீகாரத்தை சமூகமயப்படுத்தவூம் முத்திரையொன்றின் வெளியீடும் மற்றும் இலங்கையிலுள்ள முக்கிய மதங்களில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி கற்பிக்கப்படுகின்ற போதனைகளை உள்ளடக்கி அச்சிடப்பட்ட சர்வ சமய நூலின் அங்குரார்ப்பண விழாவும் 20.10.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் கௌரவ சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் கௌரவ வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் இவ் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆலோசகர் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணியான கலாநிதி ஜெகத் குணவர்த்தன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு. எஸ்.அமரசிங்க உள்ளிட்ட சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்
இதற்கு மேலதிகமாக, இலங்கை தபால் திணைக்களத்தின் தபால்மா அதிபர் உள்ளிட்ட முத்திரை வெளியீட்டு பணியகத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுடன் முக்கியமான நான்கு மதங்களிலுள்ள சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை எமுத்துருவில் வெளிக்கொணர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், சுற்றாடல் முன்னோடிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் ஊடக துறையினரும் இப்பெருவிழாவில் பங்கேற்றனர்
இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்துடன் இணைந்து சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை வலுப்படுத்துவதற்கும் அதற்கு உத்தியோகபூர்வ மதிப்பை வழங்குவதற்கும் இத்தகைய முத்திரையை வெளியிடுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முத்திரை தொடர்பான படங்களை உருவாக்க சுற்றாடல் முன்னோடிகள் உள்ளிட்ட பாடசலைகளுக்குள் தெரியப்படுத்துவதில் விஜயா பத்திரிக்கை அளித்த பங்களிப்பும் தனித்துவமானது.
சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் தெரிவிப்பதற்காக பல்வேறு சமய அறிஞர்கள் ஆற்றி வரும் பெரும் பணியை சமூகமயமாக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள சுற்றாடல் பற்றிய போதனைகள் இந்த சர்வமத புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்த போதனைகளில் நிபுணரான தேசிய மதிப்புகள் ஊக்குவிப்பு நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்தி குலதுங்க பௌத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வளங்களை வழங்கினார். இஸ்லாம் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பரீனா ருசைக், கிறித்துவ மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி தேசிய இறையியல் கல்லூரி விரிவுரையாளர் வண. கலாநிதி ஜயலத் பலகல்ல, இந்து சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஓய்வு பெற்ற அதிபரும் யாழ் சிவபூமி அரும்பொருட் காட்சியகத்தின் ஸ்தாபகருமான கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999