மானிட வர்க்கத்திற்கும் சுற்றாடலுக்கும் இடையில் நிலவுகின்ற பரஸ்பர ஈடுபாடு யாதெனில் அது மனிதத்தின் நீண்டகால வழியுரிமையை உறுதிப்படுத்துவதாகும். சுற்றாடல் சமநிலையற்ற சுற்றுச்சூழலொன்றில் வசிக்கவேண்டிய நிலை ஒருவருக்கு ஏற்படின் அது மானிட வர்க்கத்தின் வழியுரிமைக்கு சிக்கலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைவதோடு அத்தகைய பாதகமான விளைவுகளையும் தாக்கங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள பாரிய பிரயத்தனம் புரியவேண்டி ஏற்படும்.
உலகப் படத்தின் தனித்துவமானதும் சுற்றாடல்ரீதியாக முக்கியமான இடமொன்றில் அமைந்துள்ளதுமான எமது தாயகத்தின் பிரசைகளாக இருக்கின்றமைக்காக நாம் அனைவரும் பெருமிதம் அடையவேண்டும். எமது தாயகத்திற்கு மரபுரிமையாக அமைந்துள்ள இயற்கையின் கொடைகளை பாதுகாத்துச் செயலாற்றுதல் இன்றைய தினத்தில் எமது தனித்துவமான செயற்பொறுப்பாக மாறியுள்ளது.
இந்த தூதுப்பணியை ஒழுங்குறுத்துவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அவசியமான அனைத்துவிதமான சட்டமுறையான ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் திறமையான உத்தியோகத்தர் குழாத்துடனும் சிறப்பாக தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது ஒட்டுமொத்த பதவியணியும் இலங்கையர் அனைவரும் சுற்றாடலைப் பாதுகாக்கும் உன்னதமான பணிக்கும் செயற்பொறுப்புக்கும் தோள்கொடுத்து கையளிக்கப்பட்டுள்ளதோடு அதற்கு அவசியமான தலைமைத்துவம் வழங்குகின்ற அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபைத் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகமாகிய நான் தோன்றுகின்ற அனைத்து தடைகளையும் வென்றெடுத்து எல்லாச் சந்தர்ப்பத்திலும் இந்த அதியுன்னதமான பணியை வெற்றியீட்டச்செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு இலங்கை நிலப்பரப்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள எனது பூரணமான நல்லாசியையும் நல்வாழ்த்துக்களையும் இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன்.
பணிப்பாளர் நாயகம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999