பெசல் உடன்பாட்டின் கடப்பாடுகளை அமுல்படுத்தல் (BC) (www.basel.int)
பெசல் உடன்பாட்டில், பட்டியலிடப்பட்ட கழிவின் ஏற்றுமதி, இறக்குமதி, நகர்த்தல் தொடர்பான தேசிய கடப்பாடுகளின் அமுலாக்கமானது, BC இற்கான தேசிய அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரசபையாக ம.சு.அ. சபையினால் மேற்கொள்ளப்படுகின்றது.
கழிவு அல்லது மீள்சுழற்சி பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகள்
இலங்கைக்குள் எந்தவொரு கழிவு/ மீள்சுழற்சி பொருளையும் இறக்குமதி செய்வதற்கு முன்னர் இறக்குமதியாளர்கள் கழிவு அல்லது மீள்சுழற்சி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, ம.சு.அதிகாரசபையிடமிருந்து முன் அங்கீகாரத்தை பெறுவதற்கு தேவைப்படுத்தப்படுகின்றனர்.
தோற்றம் பெற்ற நாட்டின் அதிகாரத் தன்மையும் பொருட்களின் மூலமும்:
செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தின் ஒரு பிரதி – பொருள் எந்த தொழில்துறைக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்பதைக் காட்டும் செல்லுபடியான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம்.
தோற்றம் பெற்ற நாட்டின் உற்பத்தி செயன்முறையின் ஓர் அறிக்கை, தோற்றம் பெற்ற நாட்டில் காணப்படுகின்ற மூலங்களிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களின் மொத்த அளவு, இணைப்பு கட்டமைப்பு.
பொருளின் நச்சுத்தன்மை இன்மை மற்றும் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடமொன்றிலிருந்து பெறப்பட்ட பகுப்பாய்வு அறிக்கை.
மூலப்பொருளின் மாதிரி / புகைப்படம்:
பிரதான தயாரிக்கப்பட்ட உற்பத்திகளின் மற்றும் அளவுகளின் பட்டியல்
துணை உற்பத்தி பொருட்களின் பட்டியல்:
செயன்முறையிலிருந்து வருகின்ற கழிவுகளின் விபரமும், கழிவு நீக்க பொறிமுறையும்
தொழில்துறை செயன்முறையிலிருந்து எழுகின்ற கழிவை ஏற்றுக் கொள்வதை விருப்பம் தெரிவிக்கும் அறிக்கையுடன் வேறு நாடு/ ஏற்றுமதி செய்யும் நாட்டுடன் ஓர் உடன்படிக்கை
பெசல் தொ.நி. குழுவுக்கு செயன்முறை கட்டணம் அறவிடல் (10,000/=)
இந்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தன் பின்னர்;
ம.சு.அதிகாரபையிலுள்ள பெசல் தொழில்நுட்ப நிபுணர் குழுவுக்கு சமர்ப்பித்தல்.
சுற்றாடல் அமைச்சின் பெசல் உடன்பாட்டின் அமுலாக்கத்திற்கான தேசிய ஒருங்கிணைப்பு குழுவிற்கு தொழில்நுட்ப நிபுணர் சார் குழுவின் தீர்மானங்ளை சமர்ப்பித்தல்.
அனுமதி வழங்கப்பட்டவுடன் தொழில்துறைகள் பெசல் உடன்பாட்டின் “பீ” பட்டியலில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள கழிவு/ மீள்சுழற்சி பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன.
அனுமதியினை புதுப்பித்தல் செய்ய முன்னர் கழிவு முகாமைத்துவ அலகின் அலுவலர்கள் தொழில்துறையை கண்காணிப்பர்.
அடுத்த புதுப்பித்தலுக்காக எஞ்சிய பொருட்களை ம.சு.அ. சபைக்கு தொழிலதிபர்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.
அபாயகரமான கழிவு பொருட்களின் ஏற்றுமதிக்கான அங்கீகார நடைமுறைகள்
தொடர்புடைய ஆவணங்களாவன
நிதி உத்தரவாதமும் காப்புறுதியும்
அகற்றுபவர்/ இறக்குமதியாளருடனான உடன்படிக்கை. அனைத்து ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களையும் பொருத்தவரையில், ஒரு எழுத்து மூலமான உடன்படிக்கை அல்லது உடன்படிக்கை தொடர் அனைத்து நகர்வுகளையும் அடக்கியதாக, குறிப்பீடு செய்யப்பட்டவருடன் ஆரம்பித்து அகற்றல் வசதிகள் முடிவடைவதாக அமைதல் வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள நபர் கழிவுகளின் முகாமைத்துவம் தேவைப்படின் அவற்றின் மீள்திரும்பல் உட்பட அனைத்திற்கும் பொறுப்பானவராக இருத்தல்.
நகர்த்தும் நாடு அல்லது நகர்த்தும் நாடுகள் அவர்களது இணக்கத்தை வழங்கவில்லையாயின் ஏற்றுமதியாளர் அதன் பிரகாரம் பாதையை மாற்றவோ அல்லது ஏற்றுமதியை தொடராதிருக்கவோ அறிவிக்கப்படுவார்.
இதே நேரத்தில் இது குறித்து இலங்கை துறைமுகத்திற்கும் இலங்கை சுங்கத்திற்கும் சமகாலத்தில் அறிவிக்கப்படும்.
வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இதன் கருத்து என்னவெனில், கழிவின் வகை மற்றும் கழிவு எடுத்துச் செல்லும் இடம் என்பன மாறாதிருக்கின்ற நிலையில் அனுமதியின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட தொன்களின் வரையறை வரைக்கும் ஒரு அனுமதியில் பல்வேறு கொள்கலன்களையும் எடுத்துச் செல்லலாம்.
அபாயகரமான கழிவின் நகர்த்தலுக்கான அங்கீகார நடைமுறை
அறிவித்தலையும், பொருத்தமான ஆவணங்களையும் சரிபார்க்க.
இலங்கை துறைமுகம் மற்றும் இலங்கை சுங்கம் என்பவற்றுக்கு நிபந்தனைகளுடனான அதிகாரமளிப்பொன்றின் பிரதிகளை வழங்குதல்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999