இலங்கையில், கருத்திட்ட மட்ட சு.தா. மதிப்பீடானது 1993 இல் இருந்து வினைத்திறனுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கருத்திட்ட மட்ட சு.தா.ம. சுற்றாடல் தாக்கங்கள் தீர்ப்பதில் வினைத்திறன் கொண்டதாக இருந்தபோதிலும், அநேகமாக அவை, பல்வேறு கருத்திட்டங்களின் மொத்தமான தாக்கங்களை கவனத்திற் கொள்ள தவறிவிடுகின்றன. தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடானது இது தொடர்பில் உள்ள மிகவும் தாக்கமுள்ள கருவியொன்றாக நிரூபிக்கப்பட முடியும். உயர் உபாயமுறை மட்டத்தில் தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடானது பிரயோகிக்கப்படுவதோடு, உபாயமுறை மட்டத்தில் கூறப்பட்டுள்ள கொள்கை திட்டமிடலொன்றின் அல்லது நிகழ்ச்சித்திட்டமொன்றிற்குரிய சாத்தியாமான சுற்றாடல் தாக்கங்களை அதனூடாக உறுதிப்படுத்துகின்றன.
தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடானது இதுவரை இலங்கையில் கட்டய தேவைப்பாடொன்றாக இல்லை. எவ்வாறாயினும், அமைச்சரவையானது இலங்கையில் திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் கொள்கைகளுக்கு த.சு.மதிப்பீட்டின் அமுலாக்கத்தை அங்கீகரித்துள்ளது. புதிய கொள்கை, திட்டம் அல்லது நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றினை அமுல்படுத்துவதற்கு பொறுப்பான அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகள் என்பன புதிய கொள்கை, திட்டம் அல்லது நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடொன்றை மேற்கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகின்றன.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999