அபிவிருத்தி திட்டமிடலுக்கான சுற்றாடல் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்திற்காக வினைத்திறன்மிக்க கருவியொன்றாக சுற்றாடல் தாக்க மதிப்பீட்டின் முக்கியத்துவம் இலங்கையில் உயர்வாக அங்கீகரிக்கப்படுகிறது. கருத்திட்டமொன்றின் ஆரம்ப கட்டத்தில் சுற்றாடல் மீதான குறிப்பிட்ட சாத்தியமான தாக்கங்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு சு.தா.ம. உதவுகின்றது. அது ஏற்றுக் கொள்ள முடியாத தாக்கங்களை குறைப்பதற்கான வழிகளை கண்டறிவதற்கும், கருத்திட்டம் உள்ளூர் சுற்றாடலுக்கு ஏற்றதாக வடிவமைப்பதற்கும் உதவுகின்றது. அது கருத்திட்டமொன்று பற்றி தீர்மானங்களை உத்தியோகத்தர்கள் மேற்கொள்வதற்கு உதவுவதோடு, கருத்திட்ட பிரேரணையாளர் தனது குறிக்கோள்களை மிகவும் வெற்றிகரமாக அடைவதற்கும் உதவுகின்றது. இந்த வகையில் சு.தா.ம. ஒரு பிரதான திட்டமிடல் கருவியொன்றாக கருதப்பட முடியும் என்பதுடன் நலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கான பிரதான உத்தியொன்றாகவும் கருதப்பட முடியும்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழும் மற்றும் சில சட்டங்களின் கீழும் இலங்கையில் அபிவிருத்தி கருத்திட்டங்களை தாபிப்பதற்கான அத்தியாவசியமான தேவைப்பாடொன்றாகவும் சு.தா.ம. மாறியுள்ளது.
இலங்கையில் சு.தா.மதிப்பீட்டிற்காக சட்டம், கொள்கை மற்றும் நிறுவனசார் ஏற்பாடுகள்
ம.சு. அதிகாரசபையுடன் பதிவுசெய்துள்ள சு.தா.ம. உசாவலர்களின் பட்டியல்
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999