SinhalaSriLankaEnglish (UK)

இலங்கையில் சு.தா. மதிப்பீட்டுக்கான சட்ட, கொள்கை, நிறுவன ரீதியான ஏற்பாடு

அ. தேசிய சுற்றாடல் சட்டத்தின் சு.தா.ம.


முழு நாட்டுக்குமான வேண்டப்படுகின்ற பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கான உபாயமுறையின் அங்கமொன்றாக சு.தா.ம. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் கீழ் அறிமுகப்படுத்தியதோடு, இதனை முறைப்படுத்தும் தொழிற்பாடுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


•    திருத்தச் சட்டத்தின் பகுதி IV C அனைத்து “குறித்துரைக்கப்பட்ட” அபிவிருத்தி கருத்திட்டங்களும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ளன என்ற ஆணையை கொண்டுள்ளது. சுற்றாடல் மீது கணிசமான அளவு தாக்கங்களை செலுத்தும் என கருதப்படுகின்ற பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்கள் மாத்திரம் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் என பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலாக “குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள்” சுற்றாடல் கூருணர்வுள்ள பகுதிகளில் அமைந்திருந்தால் அவற்றின் அளவின் தன்மையை கருத்திற் கொள்ளாது சு.தா.ம. உட்படுத்தப்படுவதற்கு தேவைப்படுத்தப்படுகின்றன.1993 யூன் 24 ஆம் திகதிய 772/22, 1995 பெப்ரவரி 25ஆம் திகதிய 859/14, 1999 நவம்பர் 5ஆம் திகதிய 1104/22, 1999 நவம்பர் 29ஆம் திகதிய 1108/1 ஆம் இலக்க வர்த்தமானியில் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


•    அனைத்து குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களுக்குமான அங்கீகாரமானது கருத்திட்ட அங்கீகார முகவராண்மை ஒன்றினால் வழங்கப்பட வேண்டுமென தேசிய சுற்றாடல் சட்டம் மூலம் நிருணயிக்கப்படுகின்றது. தற்போது 23 அரசாங்க முகவராண்மைகள் கருத்திட்ட அங்கீகார முகவராண்மையாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. கருத்திட்டம் ஒன்றிற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டை நிர்வகிப்பதற்கு பொறுப்பானதாக ஒரு தனி கருத்திட்ட அங்கீகாரமளிக்கும் முகவராண்மை நிறுவப்பட்டுள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட க.அ.மு (கருத்திட்ட அங்கீகார முகவராண்மை) உள்வாங்கப்படும் போது பொருத்தமான க.அ.மு மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் தீர்மானிக்கப்படுகின்றது. கருத்திட்டத்தின் அங்கமொன்றாக இருக்கின்ற அரசாங்க முகவராண்மை ஒன்று அந்த கருத்திட்டத்திற்கான க.அ. முகவராக தொழிற்பட முடியாது என்பது கவனிக்கத்தக்கது.1995 பெப்ரவரி 23ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி, 2004 டிசம்பர் 29ஆம் திகதிய 1373/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி என்பவற்றில் கருத்திட்ட அங்கீகாரமளிக்கும் முகவராண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


•    தேசிய சுற்றாடல் சட்டமானது சு.தா.ம. செயன்முறையின் இரண்டு மட்டங்களை அடையாளங் கண்டுள்ளது. கருத்திட்டத்தின் சுற்றாடல் தாக்கமானது கணிசமானதாக இல்லாவிட்டால் கருத்திட்ட ஆதரவாளர் ஆரம்ப சுற்றாடல் பரிசோதனை (ஆ.சு.ப) ஒன்றை செய்யும் படி கோரப்படுவர் என்பதோடு இது ஒப்பீட்டு ரீதியில் குறுகிய மற்றும் எளிய ஆய்வாகும். எவ்வாறாயினும், சாத்தியமான தாக்கங்கள் மிகவும் முக்கியமானதாக காணப்பட்டால், சுற்றாடல் தாக்க மதிப்பீடொன்றை செய்யும்படி கருத்திட்ட ஆதரவாளர் கோரப்படுவார். இது சுற்றாடல் தாக்கங்கள் பற்றிய மிகவும் விரிவான மற்றும் பரந்த அடிப்படையிலான ஆய்வாகும்.

 பொதுமக்களின் கருத்துரைக்காக 30 வேலை நாட்களுக்கு சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் வெளிப்படையாக வைக்கப்படும். ஆரம்ப சுற்றாடல் பரீட்சிப்பு அறிக்கைகள் இந்த தேவைப்பாடிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டிருக்கின்றன. எவ்வாறாயினும் ஆரம்ப சுற்றாடல் பரிசோதணை அறிக்கையானது சான்று கட்டளை சட்டத்தின் (அத்தியாயம் 21) இன் 74 மற்றும் 76ஆம் பிரிவுகளின் நோக்கத்திற்காக பொது ஆவணமாக கருதப்படும் என்பதோடு பொதுமக்களின் பார்வையிடலுக்காக வெளிப்படையாக வைக்கப்படும்.


ஆ. கரையோர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சு.தா.ம.


1981 ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தின் கிழ் இலங்கையில் முதன் முதலாக சு.தா. மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இது “கரையோர வலயத்தினுள்” வருகின்ற கருத்திட்டங்களுக்கு பிரயோகிக்கப்படுகின்றது. கரையோர வலையமானது சராசரி உயர் நீர்மட்டக்கோட்டின் நிலம் நோக்கிய 300 மீட்டர் எல்லையொன்றையும் மற்றும் சராசரி தாழ் நீர்மட்டக்கோட்டின் கடல் நோக்கிய 2 கிலோமீட்டர் எல்லையொன்றையும் உள்ளடக்கிய பரப்பளவாகும். இச் சட்டத்தின் கீழ் சுற்றாடல் தாக்க மதிப்பீடு தேவைப்படுகின்ற கருத்திட்டங்களை அடையாளங் காணக்கூடியதானது, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளரின் விருப்புரிமைக்கு விடப்படுகிறது.


இ. 1993 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க தாவர, விலங்கியல் (திருத்தச்) சட்டத்தில் சு.தா.ம.

1993ஆம் இலக்க 49ஆம் இலக்க தாவர, விலங்கின (திருத்தச்) சட்டத்திலும் சு.தா. மதிப்பீட்டின் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரகாரம், இயற்கை ஒதுக்கின் எல்லையிலிருந்து ஒரு மைல் பரப்பினுள் எந்த வகையில் உத்தேசிக்கப்படக்கூடிய எவ்வாறான விபரத்தைக் கொண்ட எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் தாபிக்கப்படுவதற்கு சு.தா.மதீப்பிட்டிற்கு உட்பட வேண்டிய தேவைப்பாட்டை கொண்டிருப்பதோடு, அத்தகைய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து எழுத்து மூலமான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

Thursday, 14 September 2023 05:47 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

PEA2024cooltext452053042169170 2024-03-15-Closing-Date-extended-up-to-31st-March-2024 1

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்