SinhalaSriLankaEnglish (UK)

தொழில்துறைகளினால் சுற்றாடல் மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதியளிப்பு

  1. மாசுறுதலை குறைத்தலும் தடுத்தலும்

குறித்துரைக்கப்பட்ட சுற்றாடல் நியமங்களை நிறைவு செய்வதற்கான கழிவு நீர் வெளியேற்றுகை, ஒலி வெளியேற்றங்கள் தொடர்பில் மாசுறுவதை கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கைகளை விண்ணப்பதாரர் மேற்கொள்ள வேண்டும். இந்த  மூன்று வித அனைத்து சுற்றாடல் சார் ஊடகங்களிலும் (வளி, நீர், நிலம்) தாக்கங்களை குறைப்பதற்கு ஏற்றவகையில் கழிவு நீக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவது விண்ணப்பதாரிகளின் பொறுப்பாக இருப்பதோடு, இதன் மூலம் சிறந்த நடைமுறைச் சாத்தியமான சுற்றாடல் தெரிவு (Best Practicable Environmental Option - BPEO) மற்றும் காணப்படுகின்ற சிறந்த தொழில்நுட்பம் (Best Available Technology - BAT) என்பவற்றின் ஊடாக முழுதுமளாவிய, உச்சமட்ட சுற்றாடல் சார் தீர்வை அடைந்து கொள்வதாகும்.

இந்த நோக்கத்திற்காக சு.பா.அனுமதிபத்திரம் தேவைப்படும் விண்ணப்பதாரியொருவர் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடமொன்றிலிருந்து அத்தகைய கழிவுகளையும் வெளியேற்றங்களையும் அளவிடுவதன் மூலம் அத்தகைய தொழில்துறை செயற்பாட்டின் காரணமாக நிகழ்கின்ற மாசுறுதல் மட்டங்களை மதிப்பிட வேண்டிய தேவையை கொண்டுள்ளார்.

  1. விசேட நிபுணர்கள்/ ஆலோசகர்களின் பட்டியல்
  2. ஆய்வுகூடங்களின் பட்டியல்

மாசுறுதல் மட்டங்களை ம.சு.அ. சபையினால் குறித்துரைக்கப்பட்ட நியமங்களுக்கு இயைந்து செல்வதை நிரூபிப்பதற்காக தொழிலதிபர்களினால் மேற்கொள்ளப்பட்ட சில சுற்றாடல் சார் அளவீடுகள் அல்லது மதிப்பீட்டின் அளவீடு, கழிவுகள், அல்லது வெளியேற்ற மட்டங்கள் குறித்துரைக்கப்பட்ட நியமங்களை விஞ்சினால், விண்ணப்பதாரி பொருத்தமான மாசுறுதல் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுற்றாடல் மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல், ஆலோசனை/ உசாவுகையை பெற்றுக் கொள்வதற்கு வசதியளிக்கும் பொருட்டு, ம.சு. அதிகாரசபையினால் விசேட நிபுணர்கள்/ ஆலோசகர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ம.சு.அதிகாரசபையின் நியமங்களுக்கு இயைவான தமது கழிவு அல்லது வாயு மாதிரிகளை எங்கு பரிசோதிக்க முடியும் என்பதை தொழிலதிபர்கள் அறிந்து கொள்வதற்காக ஆய்வுகூடங்களின் பட்டியலொன்றும் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

சில ஆலோசகர்கள்/ விசேட நிபுணர்களினால் வழங்கப்படுகின்ற உசாவுகையில் சில தொழிலதிபர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனா என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய சிலர் சுற்றாடல் அளவீடுகளின் சரியான, தரமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சினைகளை தொழிலதிபர்கள் வெற்றி கொள்வதற்கு ஏற்றதாகவும் தொழில்துறை சமூகத்திற்கு சிறந்த சேவைகளை வழங்குமுகமாக ம.சு. அதிகாரசபையானது தற்போதுள்ள உசாவுணர், மற்றும் ஆய்வுகூடங்களின் பட்டியல், அவற்றின் செயலாற்றுகை காலத்திற்கு காலம் மதிப்பிடுவதற்காக அவற்றை மீளாய்வு செய்து இற்றைப்படுத்துகின்றது.

எவராவது விசேட நிபுணர் அல்லது ஆய்வுகூட ம.சு.அ. தம்மை பதிவு செய்து கொள்ள விரும்பினால் அவர்கள் பின்வனவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

  • வியாபாரப் பதிவு

  • கம்பனி சுயவிபரம்

  • வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட 3 கருத்திட்டங்களிலிருந்து வாடிக்கையாளர் திருப்தி கடிதங்கள்

உசாவுநர்/ விசேட நிபுணர்/ ஆய்வுகூடமொன்றின் பதிவுக் கட்டணம் ரூபா. 7,500/= ஆகும் என்பதுடன் வருடாந்த சந்தா ரூபா. 10,000/= ஆகும்.

  1. உயர் மற்றும் நடுத்தர மாசுறுதல் தொழில்துறை இடவமைப்பு குழு:

தொழில்துறை பேட்டைகள், ஏற்றுமதி பதனிடல் வலயங்களுக்கு வெளியே உயர் மற்றும் நடுத்தர மாசுறுதல் தொழில்துறைகளின் அமைவிடம் குறித்து தீர்மானிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றாடல் மாசு கட்டுப்பாட்டு அலகின் மிக முக்கியமாதொரு தீர்மானம் எடுக்கும் குழுவாகும். இக்குழு முதலீட்டுச் சபை. உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, தொழில்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை என்பவற்றின் உறுப்பினர்களைக் கொண்டமைந்துள்ளது.

இந்தக் குழுவின் பிரதான நோக்கம் யாதெனில் பாரிய கொழும்பு பகுதியில் நீர்த்தேவையின் 75% மேற்பட்ட பகுதியை வழங்கல் செய்வதற்கு அம்பத்தலையிலிருந்து அடிப்படை நீரை வழங்குகின்ற களனி கங்கைக்கு பிரதானமாக தொழில்துறை கழிவுகளினால் ஏற்படுகின்ற நீர் மாசுறுதலை குறைப்பதாகும். ஆனால் தற்போது குழு ஏனைய சில உள்ளூர் நீர் நிலைகளுடன் உயர் மற்றும் நடுத்தர தொழில்துறைகளையும் கருத்திற் கொள்கின்றது.

களனி ஆற்றின் அருகில் தொழில்துறைகளின் இடவமைப்புக்கான அமைச்சரவை விஞ்ஞாபன வழிகாட்டல் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

  1. சூழல் நட்புடைய கால்நடை பண்ணை தொடர்பான ஆலோசனைக் குழு

கால்நடை பண்ணைகளினால் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள் தினமும் அதிகரித்து வருகின்றன. இவற்றினால் குடிநீர் மூலங்களில் விசேடமாக அசுத்தப்படுத்தும் துர்நாற்றத்தையும் கழிவுகளையும் வெளியிடுவதாக அவை குற்றம் சுமத்தப்படுகின்றன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஒரு உயர் சபை என்ற வகையில் கால்நடை கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு என்பவற்றுடன் இணைந்து சூழல் தொடர்பான விடயங்கள் குறித்த கொள்கை சிபாரிசுகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கி உதவியளிக்கும் நோக்கத்துடன் ஆலோசனை குழுவொன்றை தாபித்துள்ளது.

இலங்கையில் சுற்றாடல் நட்புறவான கால்நடை வளர்ப்பு தொழில்துறைகளின் அணுகுமுறை குறித்த கருத்தை பரப்புவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்போர் கூடத்தில் 2010 நவம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று விழிப்புணர்வு செயலமர்வொன்றும் நடாத்தப்பட்டது.

பிரதான குறிக்கோள்கள்:

குறிப்பிட்ட சுற்றாடல், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார அம்சங்களின் சாத்தியமான உயர் நியமங்களை பேணுவதற்கு கால்நடை வளர்ப்பு தொழில்துறை, சுற்றாடல் மற்றும் சுகாதாரத் துறை என்பன ஒன்றுடன் ஒன்று இணைத்து செயற்படுதை உறுதிப்படுத்தல்.

மாவட்ட குழுக்களை அமைத்து கால்நடை பண்ணை துறையை அபிவிருத்தி செய்வதில் அனைத்து தரப்பினருக்குமிடையே முறையான ஒருங்கிணைப்பொன்றை விருத்தி செய்தல். அத்தகைய ஒரு குழு மேல் மாகாணத்திற்காக தாபிக்கப்பட்டிருக்கின்றது.

கால்நடை வளர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொறுப்பு வாய்ந்த முகவராண்மை மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான வழிகாட்டல் புத்தகமொன்றை தயாரித்து, தொழில்நுட்ப வழிகாட்டல்களை தரப்படுத்துதல். வழிகாட்டல் புத்தகத்திற்கான கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெறுவதோடு, புத்தகம் விரைவில் வெளியிடப்படும்

கால்நடை துறை தொடர்பாக தொழில்நுட்ப உத்தயோகத்தர்கள்/ சுற்றாடல் உத்தயோகத்தர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

  1. ம.சு.அதிகாரபையில் பதிவு செய்த ஆய்வுகூடங்களுக்கான வினைத்திறன் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டம்
  • இலங்கை ஆய்வுகூட பரிசோதனைகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, ம.சு.அ. இல் பதிவு செய்துள்ள தனியார் துறை ஆய்வுகூடங்களின் செயலாற்றுகையை கண்காணிப்பதற்காக வருடாந்தம் வினைத்திறன் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்கின்றது.
  • 2013 இல் 29 ஆய்வுகூடங்கள் ம.சு.அதிகாரபையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வினைத்திறன் பரிசோதனை நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான தொடக்க ஆயத்தங்கள் இடம்பெறுவதோடு முன்கூட்டிய உறுதிப்படுதுதல் அடிப்படையில் ஆய்வுகூடங்களை தெரிவு செய்து 2013 யூன் மாதத்தில் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்க ம.சு.அ. உத்தேசித்துள்ளது.
  • இந்த நிகழ்ச்சித்திட்டமானது ஆய்வுகூடங்கள் உத்திகளை பகுப்பாய்வு செய்தல், மாதிரிகளை கையாளல் என்பவற்றில் தமது திறமைகளை மேம்படுத்துவதற்கு வழியமைக்கும். வாடிக்கையாளரும் தீர்மானம் எடுக்கும் அதிகாரிகளும் மாசுறுதல் கட்டுப்பாட்டு உபாயமுறைகளின் சிறந்த அமுலாகத்திற்காக சரியான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
  1. இணக்கப்பாட்டு ஒத்துழைப்பு நிலையம்

பல்வேறுபட்ட காரணங்களினால், மாசுறுதல் கட்டுப்பாடானது பெரும்பாலான நடுத்தர மற்றும் சிறிய அளவு தொழில்துறைகளினால் சிறப்பாக முகாமை செய்யப்படவில்லை என்பதை ம.சு.அ. எடுத்துக் காட்டுகிறது. மாசுறுதல் கட்டுப்பாட்டில் அதனுடன் தொடர்பான செலவு முக்கிய காரணமாக இனங்காணப்பட்டுள்ளது. பிரதானமாக நிபுணத்துவம் மற்றும் நிர்மாண செலவாகும்.

இவ்விடயத்தை கவனத்திற்கொண்டு இணக்கப்பாட்டு ஒத்துழைப்பு நிலையத்தை தாபிப்பதை அதற்கு தீர்வொன்றாக அமையும் என சுற்றாடல் மாசு கட்டுப்பாட்டுப் (சு.மா.க.) பிரிவு கருதுகின்றது.

ம.சு.அதிகாரபையிலுள்ள இணக்கப்பாட்டு ஒத்துழைப்பு நிலையங்களை முன்னெடுப்பதற்கு, தொழில்நுட்ப முகவராண்மைகளிடமிருந்து தொழில்நுட்ப உதவி பெறப்பட வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாக NERD, ITI, IDB, NCPC மற்றும் சுவிட் ஏசியா நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றுடன் சு.மா.க. பிரிவு  பல தொடர் கூட்டங்களை நடாத்தியது. இந்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்துறைகளுக்கு குறைந்த செலவுள்ள உத்திகளின் செயல் திட்டங்களை ம.சு.அ. அறிமுகப்படுத்துகிறது.

தற்போது மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் தமது சேவை நிறுவனங்களால் இந்த முறைமையை கையாண்டு வருவதோடு, அவற்றில் பல வளர்ந்துவரும் கட்டத்தில் உள்ளன.

தொழில்துறைகளின் தேவையான தகவல்களை இலகுவாக பெறுவதற்கு உதவியளிக்கும் முகமாக வலைமைப்பொன்றை விருத்தி செய்தை சு.மா.க பிரிவு கருத்திற்கொன்டுள்ளது.

Wednesday, 26 February 2020 04:37 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Complaint Customer Portal An environmental complaint can be lodged though CEA... மேலும் வாசிக்க
New Year 2023 To mark the commencement of the New Year 2023, the... மேலும் வாசிக்க
Service Appreciation 2023 In conjunction with the celebrations of the New Year... மேலும் வாசிக்க
A special program for retied Officers Under the guidance of Mr. Supun S Pathirage, Chairman and... மேலும் வாசிக்க