SinhalaSriLankaEnglish (UK)

மாளிகாவத்தை, தொம்பேயில் ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ முறையின் நிர்மாணம்

அறிமுகம்

2008 ஏப்ரல் 24ஆம் திகதியன்று சுற்றாடல் மற்றும் இயறகை வளங்கள் அமைச்சின் செயலாளருக்கும் கொரிய சர்வதேச கூட்டுறவு முகவராண்மையின் வதிவிட பிரதிநிதிக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட கலந்துரையாடல் பதிவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கும் கொரிய அரசாங்கத்திற்குமிடையே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையின் பிரகாரம் கொரிய அரசாங்கமானது தொம்பேயில் சுகாதார முறைப்படியிலான கழிவு நிரப்பல் இடமொன்றை விருத்தி செய்வதற்கு ரூ. 450 மில்லியன் நிதி உதவியையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு, உடன்படிக்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ரூ. 150 மில்லியன் பங்களிப்பொன்றையும் வழங்குகின்றது.

 

இந்த காணி நிரப்பலானது நாளாந்தம் 10 தொன் கழிவுகளை முகாமை செய்யும் விதத்தில் தொம்போ பிரதேச சபைக்கு இறுதி நீக்கல் இடமாக இருப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த இடம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானதாக இருந்ததோடு (LRC) வர்த்தக ரீதியாக காட்டு பெருந்தோட்டமொன்றை தாபிப்பதற்கு வனவளத் திணைக்களத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவானது ம.சு.அதிகாரசபைக்கு 68 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கும் (நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு) அவற்றில் 6 ஹெக்டயர் கழிவு நிரப்பல் இடத்தை நிர்மாணிப்பதற்கான முக்கிய பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறிக்கோள்கள்

கருத்திட்டத்தின் குறிக்கோள்களாவை:

 • கழிவு முகாமைத்துவத்திற்கு பொறுப்பான கொள்கை வகுப்பாளர்கள், அரசாங்க அதிகாரிகளின் திறனை மேம்படுத்தல்;

 • ஆதரவு கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ முறைமை தாபித்தலும் முறைமையின் வெற்றிகரமான அமுலாக்கமும்;

 • வளங்கள், பிறப்பாக்கல் தொகுதி, திரட்டல் மற்றும் அல்லது வீட்டுக் கழிவு நீக்கம் என்பன பற்றிய பட்டியல் சார் அளவாய்வொன்றை நடத்துதல்;

 • மேற்குறிப்பிட்ட பிராந்தியங்களில் பிறப்பிக்கப்படுகின்ற வீட்டு கழிவுகளுக்கு பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க திரட்டல் முறைமையொன்றை வடிவமைத்து அமுல்படுத்தல்;

 • துப்பரவு கழிவு காணி நிரப்பல் இடம் மற்றும் தொடர்புடைய ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளினை நிர்மாணித்தல்.

 

இலங்கை அரசாங்கத்தின் கலந்துரையாடல் பதிவின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் சிறந்த கட்டமைப்பு தொடர்புடைய எஞ்சிய நிர்மாண பணியை தொடர KOICA இயலச் செய்யும் வகையில் சுகாதார முறைப்படியிலான கழிவு நிரப்பல் நிலப் பணியை மேற்கொள்வதற்கு தேவைப்படுத்துகிறது.

அதன் பிரகாரம் ம.சு.அ. கருத்திட்ட நிறைவேற்று முகவராண்மையாக செயற்பட்டு, நலப் பணிகளின் செயற்பாட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதொரு, கௌரவ சுற்றாடல் அமைச்சர், அதிமேதகு கொரிய குடியரசு தூதுவர் ஆகியோரின் பங்கேற்புடன் ம.சு. அதிகாரசபையில் இடம்பெற்ற வைபவமொன்றில் 2012 யூன் 07ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் KOICA விற்கு இந்த இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, எஞ்சிய நிர்மாணப் பணி தொடர்கின்றது.

கழிவு நிரப்புப்பகுதிக்கான உள்ளகக் காப்புறைகள், கழிவு நீர் திரட்டல் குழாய்கள், வடிகால் பாதைகள், வாயு திரட்டல் குழாய்கள் என்பவற்றின் பொருத்துகைகளை காணி நிரப்பல் பகுதியில் KOICA வினால் வேலைக்கமர்த்தப்பட்ட வரையறுக்கப்பட்ட சம்கி நிர்மாணக் கம்பனியினால் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக கட்டிடத்தின் நிர்மாணமும், கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதியின் நிர்மாணமும் இடம்பெற்று வருகின்றன.

Landfill area once earth work was completed Leachate treatment area after completion of earth work Construction of Superstructure of Landfill area Sanitary Landfill Area after completion of the Construction

 

Wednesday, 11 September 2013 09:18 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

infoacttam

oilP

ReEBwaste

weerawilatam

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
Reading of Stamps To give a broad knowledge and idea about the story on the... மேலும் வாசிக்க