SinhalaSriLankaEnglish (UK)

கௌரவ சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அவர்களின் செய்தி

பல்வேறு சர்வதேச உடன்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகள் வாயிலாக சுற்றாடல் நேயமுள்ள அபிவிருத்தியில் உலகத்தலைவர்கள் பிரவேசித்துள்ளதோடு புத்தாயிரமாம் ஆண்டுக்கான குறிக்கோள்களை மேலும் விரிவாக்கி பதினேழு நிலைபெறுதகு அபிவிருத்திக் குறிக்கோள்களை நெருங்கி 2030 ஆம் ஆண்டளவில் நிலைபெறுதகு அபிவிருத்தியை அடைவதற்காக உலகத்துடன் கூட்டாக எமது நாடும் பயணித்து வருகின்றது.

எமது பயணப்பாதையை உரிய திசையில் ஆற்றுப்படுத்தி துரிதப்படுத்தவேண்டியது விசேடமாக அவசியமாகின்றது. அதன்பொருட்டு அனைத்து அமைச்சுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொறுப்பு உள்ளதோடு முதன்மை நிறுவனமென்றவகையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு பாரிய பொறுப்பு கையளிக்கப்படுகின்றதென்பது எனது நம்பிக்கையாகும்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை இயற்கை வளங்களின் நிலைபெறுதகுவகையிலான பாவனையைப் போன்றே மனிதர்களால் மாத்திரமன்றி பல்வேறு கைத்தொழில்கள் மற்றும் சேவை நிறுவனங்களால் பலவிதமான செயற்பாடுகள் ஊடாக மேற்கொள்ளப்படுபின்ற சுற்றாடல் மாசுபாட்டினை கட்டுப்படுத்துதலையும்   தடுத்தலையும் முறைப்படி ஒழுங்குறுத்தப்படுவதை காண்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். அதைப்போலவே பொதுமக்களின் சுற்றாடல்சார் ஆர்வம் மற்றும் பங்கேற்பினைக் கட்டியெழுப்புவதைப் போன்றே சுற்றாடல் நேயமுளள்ள கைத்தொழில் மற்றும் சேவைகள் கலாசாரமொன்றை உருவாக்குவது அத்தியாவசியமானதாக அமைவதோடு அதன்பொருட்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆற்றுகின்ற செயற்பொறுப்பினை பாராட்டி தனது செயற்பொறுப்பினை மேலும் ஊக்குவித்துக்கொள்ள இயலுமானதாக அமையட்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.  

ஜயந்த சமரவீர

கௌரவ சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்

Thursday, 12 December 2019 10:40 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

infoacttam

oilP

weerawilatam

WEDC

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13