சுற்றாடல் ஒழுங்குறுத்தலுக்காக இலங்கையில் இயங்கிவருகின்ற பிரதானமான நிறுவனமான மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடலைப் பாதுகாத்தலுடன் தொடர்புடையதாக கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு அளப்பரியதாகும். 1980 இன் 47 ஆம் இலக்கமுடைய தேசிய சூழல் (திருத்திய) சட்டத்திற்கிணங்க இயங்கிவருகின்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபை நிகழ்கால சுற்றாடல் சவால்களை வெற்றிகொண்டு பலம்பொருந்தியவகையில் செயலாற்றவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
முழுஉலகுமே சுற்றாடல் பேணலுக்காக தனது முழுமையான கவனத்தைச் செலுத்தி பசுமைப் பொருளாதாரம் மீது கவனஞ்செலுத்தியுள்ள யுகமொன்றில் நாம் செயலாற்றிவருகின்ற அனைத்துத் துறைகளிலும் நாங்களும் அதற்காக உச்சஅளவிலான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். அதன்போது சாதகமானவகையில் தமது மனோபாவங்களை மாற்றியமைத்து இதயசுத்தியுடன் தான் புரிகின்ற ஒவ்வொரு செயலிலும் சுற்றாடலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது எம்மனைவரதும் கடமையும் பொறுப்புமாகும்.
சுற்றாடல் பேணலுக்காக நடைமுறையிலுள்ள தேசிய மற்றும் சர்வதேச சமவாயங்கள்மீது கவனஞ்செலுத்தி அதற்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்கி சுற்றாடலைப் பாதுகாப்பதையும் நாட்டின் அபிவிருத்தியையும் ஒன்றுடனொன்று முட்டிமோதுகின்ற இரட்டைப்பாதையில் வழிப்படுத்தாமல் ஒன்றாகப் பயணிக்கக்கூடிய பாதையில் வழிப்படுத்த அவசியமான கொள்கைகளை வகுத்திட ஒத்துழைப்பு வழங்கவேண்டியது காலத்தின் தேவையாகும். டிஜிட்டல்மயமாக்கல் போன்ற நவீன தொழில்நுட்ப முறையியல்களின்பால் பிரவேசித்து சுற்றாடல் பேணல் பணியில் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளை பெறவேண்டியதும் இதன்போது முக்கியமானதாகும்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையை தாபித்ததன் நோக்கங்கள், பணிகள் மற்றும் கடமைகளை உயரிய மட்டத்தில் பேணிவந்து சுயநிதியீட்டல் நிறுவனமொன்றாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் பலம்சேர்ப்பதற்காக தலைமைத்துவம் வழங்குவது எனது எதிர்பார்ப்பாகும்.
வெனுர பர்னாந்து
தலைவர்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




